என் மலர்

    நீங்கள் தேடியது "plus 2 student suicide"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பல்லடம் அருகே பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் சார்லஸ் (17). இவர் கணபதி பாளையத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு சரியாக செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சார்லஸ் படிக்கும் வகுப்பு ஆசிரியர் சார்லசின் தாய் ரோஸ்லினிடம் வந்து உங்கள் மகன் சரியாக பள்ளிக்கு வருவதில்லை. பிளஸ்- 2 படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்தும் படி கூறுங்கள் என அறிவுரை கூறி சென்றுள்ளார்.

    இதனை தொடர்ந்து ரோஸ்சின் தனது மகனை கண்டித்துள்ளார். தந்தை இறந்து விட்டார். நான் தான் வேலைக்கு சென்று கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறேன். சரியாக படிக்க வேண்டும் என கூறி உள்ளார். பின்னர் வேலைக்கு சென்று விட்டார்.

    இதனால் மனம் உடைந்த சார்லஸ் தனது தாய் சேலையால் வீட்டின் உத்திரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற ரோஸ்லின் வீடு திரும்பிய போது தனது மகன் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து கதறி அழுதார்.

    இது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சார்லஸ் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டி.கல்லுப்பட்டியில் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வந்ததால் விரக்தி அடைந்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பேரையூர்:

    மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி ஜோசியர் தெருவை சேர்ந்தவர் லோகலட்சுமி, அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஒரு வருடமாக கணவர் சீனிவாசனை பிரிந்து மகன் விஜய் பிரசன்னாவுடன் (வயது 17). வாழ்ந்து வருகிறார்.

    விஜய் பிரசன்னா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் அவர் விரக்தியுடன் காணப்பட்டார். தந்தையுடன் சேர்ந்து வாழலாம் என்று அடிக்கடி தாயிடம் விஜய் பிரசன்னா கூறி வந்ததாக தெரிகிறது.

    இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்த விஜய் பிரசன்னா நேற்று வழக்கம் போல பள்ளிக்கு சென்றார். மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். பெற்றோர் பிரிந்த விரக்தியில் மகன் தற்கொலை செய்து கொண்டது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×