search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "people died"

    அதியமான்கோட்டை அருகே கண்டெய்னர் லாரி மீது சொகுசு கார் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு சொகுசு காரை 40 வயது மதிக்கத்தக்கவர் ஓட்டி வந்தார். இந்த கார் இன்று பகலில் அதியமான்கோட்டை அருகே புறவடை பகுதியில் உள்ள தொப்பூர் - கிருஷ்ணகிரி பைபாஸ் சாலையில் வந்தபோது முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியது. 

    இதில் காரை ஓட்டி வந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. 

    காரின் பதிவு எண்ணை கொண்டு அவரை அடையாளம் கண்டுபிடிக்க அதியமான்கோட்டை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
    தஞ்சை அருகே மொபட் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் முத்தலீப். இவருடைய மகன் சாதிக்பாட்சா (வயது35). அதே பகுதியை சேர்ந்தவர் ரகமதுல்லா மகன் ஜெய்லானி (வயது38). இவர்கள் இருவரும் சமையல் வேலை செய்து வந்தனர்.

    நேற்று இரவு சாதிக்பாட்சாவும், ஜெய்லானியும் ஒரு மொபட்டில் பண்டாரவாடையிலிருந்து அய்யம்பேட்டை கடைத்தெருவுக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். மொபட்டை ஜெய்லானி ஓட்டினார்.

    இவர்கள் இருவரும் நெடுந்தெரு பள்ளிக்கூடம் அருகில் சென்ற போது எதிரில் கும்பகோணத்திலிருந்து தஞ்சை நோக்கி வந்த சரக்கு ஆட்டோ மொபட் மீது மோதியது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் பலியான சாதிக்பாட்சா, ஜெய்லானி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரக்கு ஆட்டோ டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    அன்னூர் அருகே புளியமரத்தில் வேன் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

    அன்னூர்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த 12 பேர் ஊட்டிக்கு ஒரு வேனில் சுற்றுலா புறப்பட்டனர். வேனை டிரைவர் ராமதாஸ் ஓட்டி வந்தார்.இந்த வேன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோவை மாவட்டம் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் ஜெ.ஜெ.நகரில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் வேனில் இருந்த சீனு என்கிற சீனிவாசன் (24), ரிஷி (11) ஆகியோர் சம்பவ இடத்திலே பலியானார்கள். 11 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சைக்கு பின் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் பெயர் விவரம் வருமாறு-

    ராமதாஸ் (டிரைவர்)சாந்தி (60), பாஸ்கரன் (45), அவரது மனைவி நித்யா (33), லயா என்கிற தேவி (13), வினோத் குமார் (30), காவியா (12), கமல் (8), பிரவின் (29), மகாலட்சுமி (26), பெரியசாமி (31).

    விபத்தில் பலியான ரிஷி காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள பாஸ்கரன்- நித்யாவின் மகன் ஆவார்.

    டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×