search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pavalkanivai Perumal"

    • முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.
    • பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார்.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையில் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்கு சென்ற திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பூப்பல்லக்கில் ஊர் திரும்பினார். தங்கை மீனாட்சிக்கு, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்த பவளக்கனி வாய்பெருமாளும் தன் இருப்பிடம் வந்தார்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 12-ந்தேதி முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கடந்த 21-ந் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடந்தது. அதில் மீனாட்சி அம்மனின் அண்ணனாக பவளக்கனிவாய் பெருமாள் இருந்து சுந்தரேசுவரருக்கு மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுத்தார்.

    இதனையொட்டி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து கடந்த 20-ந்தேதி மாலை 5 மணியளவில் மேள தாளங்கள் முழங்க பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    இதேவேளையில் முருகப்பெருமான் தனது தாய், தந்தை (மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்திற்காக) புறப்பட்டு மதுரைக்கு வந்தார்.

    பின்னர் 21-ந் தேதி நடைபெற்ற திருக்கல்யாணம் வைபவத்தில் பங்கேற்று அருள்பாலித்தனர். நேற்று மாலை 5 மணி வரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தங்கி இருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மதுரை நகைக்கடை வீதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க வாசனை கமழும் வண்ண மலர்களான பூப்பல்லக்கில் தெய்வானையுடன் முருகப்பெருமான் தனது இருப்பிடமான திருப்பரங்குன்றம் நோக்கி புறப்பட்டார்.

    இதே வேளையில் பல்லக்கில் பவளக்கனிவாய் பெருமாளும் திருப்பரங்குன்றம் புறப்பட்டார். மீனாட்சி பள்ளம், ஜெய்ஹிந்த்புரம், பழங்காநத்தம், பைக்கரா பசுமலை வழியாக வழிநெடுகிலுமாக அமைக்கப்பட்டு இருந்த திருக்கண் மற்றும் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தப்படியே இரவில் திருப்பரங்குன்றம் வந்தடைந்து தன் இருப்பிடம் சென்றார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து இருந்தது.

    • மீனாட்சியை, தாரை வார்த்து கொடுக்க பவளக்கனிவாய் பெருமாள் 1-ந்தேதி புறப்படுகிறார்.
    • 6-ந்தேதி வரை கோவிலுக்குள் தங்கத்தேர் புறப்பாடு இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    திருப்பரங்குன்றம்

    மீனாட்சி பட்டணமான மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    திருவிழாவின் முத்தாய்ப் பாக வருகிற 2-ந்தேதி காலை 8.35 மணிக்கு மீனாட்சி அம்மன், சுந்தரே வரருக்கு திருக்கல்யாண வைபோகம் நடக்கிறது. மீனாட்சி அம்மனை சுந்த சுவரருக்கு திருப்பரங்குன்ற பவளக்கனிவாய் பெருமாள் தாரை வார்த்து கொடுப்ப தாக வரலாறாக இருந்து வருகிறது.

    இதையொட்டி மீனாட்சி அம்மன் அருளாட்சி புரிய மதுரைக்கு திருப்பரங் குன்றம் முருகன் கோவிலில் இருந்து வருகிற 1-ந்தேதி மாலை 5 மணிக்கு மேள தாளங்கள் முழங்க பவளக்கனிவாய் பெருமாள் புறப்பட்டு வருகிறார்.

    இதேவேளையில் முருகப் பெருமான், தெய்வானையு டன் புறப்பட்டு மீனாட்சி பட்டணத்திற்கு வருகிறார். திருப்பரங்குன்றத்தில் இருந்து மதுரை வரை வழிநெடுகிலுமாக ஆங்காங்கே பக்தர்கள் திருக்கண் அமைத்து முருகப் பெருமான் தெய்வானை மற் றும் பவளக்கனிவாய் பெரு மாளை வழிபடுகின்றனர்.

    2-ந்தேதி மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தில் பவளக்கனிவாய் பெருமாள் பங்கேற்று மீனாட்சி அம்மனை தாரை வார்த்து கொடுக்கிறார்.

    இதே வேளையில் தெய்வானையுடன் இதே முருகப்பெருமான் திருக் கல்யாணத்தில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக் கிறார். 5-ந்தேதி வரை மதுரையிலே தெய்வானையுடன் முருகப்பெருமான், பவளக்கனிவாய் பெருமாள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    5-ந்தேதி மாலை 5 மணியளவில் நகை வீதியில் இருந்து பல்லக்கில் பவளக் கனிவாய் பெருமாளும், பூப்பல்லக்கில் தெய்வானை யுடன் முருகப்பெருமானும் புறப்பட்டு தன் இருப்பிடமான திருப்பரங்குன்றம் வருகின்றனர்.

    மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை வழி நெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து வழிபடுகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப தங்கத்தேர் உலா நடைபெற்று வருகிறது. இதற்காக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது தங்கத்தேர் உலாவின் போது உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வா னையுடன் சுப்பிரமணியசாமி. தங்கத் தேரில் எழுந்தருளி வலம் வருகிறார்.

    இந்த நிலையில் வருகிற 1-ந்தேதி மதுரைக்கு மீனாட்சி அம்மன்-சுந்தரேசு வரர் திருக் கல்யாணத்திற்கு தெய்வா னையுடன் சுப்பிர மணியசாமி புறப்பட்டு செல்வதால் அன்று முதல் 6-ந்தேதி வரை கோவிலுக் குள் தங்கத்தேர் புறப்பாடு இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ×