search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Non-Biodegradable Garbage"

    • பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
    • சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

    சென்னை:

    பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஆனால் நிலைமை சரியில்லையே என்று சொல்லும் அளவுக்கு சென்னை மாநகராட்சியின் குப்பை கழிவுகள் மேலாண்மை இருப்பதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    சென்னை மாநகரை பொறுத்தவரை தினமும் லட்சக்கணக்கான டன் குப்பைகள் குவிகிறது. இவற்றை அகற்றுவதும், கையாள்வதும் சவாலான பணிதான். சேகரிக்கும் குப்பைகளை எளிதாக பிரிப்பதற்காக மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தனித்தனியாகவும் சேகரிக்கப்படுகிறது.

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றல் துறை இணைந்து குப்பை கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது பற்றிய விழிப்புணர்வு குறும் படங்களை தயாரித்துள்ளது. நடிகர் யோகிபாபு, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்வி ஆகியோர் நடித்த 4 விழிப்புணர்வு வீடியோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    குப்பைகளை பிரித்து கொட்டினாலே எளிதாக மறுசுழற்சிக்கு உதவும். இதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் குப்பைகளை பிரித்தெடுப்பதின் முக்கியத்துவத்தை மக்களுக்கு தெரிவித்து வருகிறோம் என்றார்கள் திடக்கழிவு மேலாண்மைதுறை அதிகாரிகள்.

    விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும் சென்னையில் பல இடங்களில் குப்பை தொட்டிகள் நிரம்பி கிடக்கின்றன. பணியாளர்கள் வராததால் குப்பை அள்ளுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    குப்பை தொட்டிகள் நிரம்பிவிட்டதால் சுற்றிலும் குப்பைகள் சிதறி கிடக்கின்றன. அழுகிய பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு விளைவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். பல உட்புற தெருக்களில் குப்பைகளை வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே அள்ளுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    குப்பைகளை கையாள்வதற்கு பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் அடுத்த சில மாதங்களில் பலர் ஓய்வு பெறுகிறார்கள்.

    மொத்தமுள்ள 15 மண்ட லங்களில் 11 மண்டலங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இப்போது மேலும் திரு.வி.க.நகர், ராயபுரம் ஆகிய மண்டலங்களையும் தனியார் வசம் ஒப்டைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா நகர் 104-வது வார்டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக கவுன்சிலர் செம்மொழி கூறினார். இங்குள்ள சுமார் 250 தெருக்களில் 100 தெருக்களுக்கும் மேலாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் 3 நாட்களுக்கு ஒருமுறைதான் குப்பை அள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

    செங்கொடி சங்க பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசலு கூறும்போது, கடந்த 2021-ம் ஆண்டிலேயே 4,600 காலிப் பணியிடங்கள் இருந்தது. கடந்த ஆண்டில் சுமார் 500 பேர் ஓய்வு பெற்றுள்ளார்கள். மாநகராட்சி அதிகாரிகள் காலி பணியிட விவரங்களை வெளியிடவில்லை என்றார்.

    • பாபநாசம் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடி காரி பார்வையிட்டார்.
    • மக்கும் மற்றும் மக்காத குப்பை வகைகள் தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சியில் வளம் மீட்பு பூங்காவினை சென்னை பேரூராட்சிகளின் கூடுதல் இயக்குனர் மலையமான் திருமுடி காரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மக்கும் மற்றும் மக்காத குப்பை வகைகள் தரம் பிரிக்கும் பணியினை பார்வையிட்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

    குப்பைகளை வகை பிரித்து, தூய்மையான பேரூராட்சியினை உருவாக்குவதற்கு தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் பேரூர் தி.மு.க செயலாளர் கபிலன், மாவட்ட உதவி செயற்பொறியாளர் மாதவன், பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலர் கீர்த்திவாசன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம், மேற்பார்வையாளர்கள் நித்தியானந்தம், நாடிமுத்து மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், பரப்புரையாளர்கள் உடன் இருந்தனர்.

    ×