என் மலர்
நீங்கள் தேடியது "Nithi Ayok"
- நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- எப்போது டெல்லிக்கு வந்தாலும் மரியாதை நிமித்தமாக சோனியா, ராகுலை சந்திப்பது வழக்கம்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு பேசினேன்.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
சென்னை 2ம் கட்ட மெட்ரோ, கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன்.
தமிழகத்தில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்.
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி விடுவிப்பு தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
அமலாக்கத்துறை மீது நீதிமன்றத்தின் கண்டனம் தெரிவித்த நீதிபதியின் கருத்து நியாயமானது.
எப்போது டெல்லிக்கு வந்தாலும் மரியாதை நிமித்தமாக சோனியா, ராகுலை சந்திப்பது வழக்கம்.
என்னிடம் வெள்ளைக் குடையும் இல்லை, இபிஎஸ்-யிடம் இருப்பது போல காவிக் கொடியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள்.
- 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 சதவீத வரிப்பகிர்வு வழங்க வேண்டும் என்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள்:-
கடந்த 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்ககூடிய வரி வருவாய்ப் பங்கினை 41 விழுக்காடாக உயர்த்தினார்கள்.
ஆனால் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு மாநில அரசு செலவிடும் அதிக நிதி பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான பங்கு 50 விழுக்காடு உயர்த்தப்படுவதுதான் முறையானதாக இருக்கும்.
'P.M.SHRI' திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், சில மாநிலங்கள் கையெழுத்து போடாததால், S.S.A. நிதி மறுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2024-2025-ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 2,200 கோடி ரூபாய் நிதி தமிழ்நாட்டுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
தாமதமின்றி, ஒருதலைப்பட்ச நிபந்தனைகளை வலியுறுத்தாமல் இந்த நிதியை விடுவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட முக்கியமான ஆறுகளையும், நாட்டிலுள்ள பிற முக்கியமான ஆறுகளையும் சுத்தம் செய்து மீட்டெடுக்கத் திட்டம் தேவை. எனவே, காவிரி, வைகை, தாமிரபரணிக்கு புதிய திட்டத்தை உருவாக்கித் தர வேண்டும்.
இந்தத் திட்டங்களுக்கு எல்லாம், ஆங்கிலத்தில் பெயரிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவற்றை மாநிலங்கள் தங்களது மொழியில் மொழிபெயர்த்துக் கொள்வார்கள்.
நாட்டிலுள்ள நகர்ப்புறங்களின் மேம்பாட்டிற்கு பெருமளவிலான நிதியைக் கொண்ட ஒரு பெரிய திட்டம் அவசியம்.
சிறந்த உட்கட்டமைப்பு, இயக்கம் மற்றும் சுகாதாரத்தை மையமாகக் கொண்ட ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்குவது அவசரத் தேவை. இதுபோன்ற ஒரு திட்டத்தை விரைவில் நீங்கள் உருவாக்கிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் தில்லுமுல்லு இருப்பதாக தகவல்.
- நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை.
மத்திய அரசு சார்பில் வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024- 25 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசு அறிவிக்கும் பட்ஜெட்டில் தில்லுமுல்லு இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்," பல்வேறு உண்மைகளை பல கட்டங்களாக மூடி மறைத்த பிறகே பட்ஜெட் வெளியிடப்படுகிறது. அரசின் வரவு, செலவு கணக்கு வெளியிப்படையாக இருந்தால் உண்மையான நிதி நிலைமை தெரிந்துவிடும்" என்றார்.
சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நிதியமைச்சகம், பிரதமர் அலுவலகம் இதுவரை பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






