என் மலர்tooltip icon

    இந்தியா

    என்னிடம் வெள்ளைக் குடையும் இல்லை, இபிஎஸ்-யிடம் இருப்பது போல காவிக் கொடியும் இல்லை- மு.க.ஸ்டாலின்
    X

    என்னிடம் வெள்ளைக் குடையும் இல்லை, இபிஎஸ்-யிடம் இருப்பது போல காவிக் கொடியும் இல்லை- மு.க.ஸ்டாலின்

    • நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன் என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • எப்போது டெல்லிக்கு வந்தாலும் மரியாதை நிமித்தமாக சோனியா, ராகுலை சந்திப்பது வழக்கம்.

    டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கான நிதியை விடுவிக்குமாறு பேசினேன்.

    கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்கள், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.

    சென்னை 2ம் கட்ட மெட்ரோ, கோவை, மதுரையில் மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை விடுவிக்குமாறு வலியுறுத்தினேன்.

    தமிழகத்தில் நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்.

    தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கான நிதி விடுவிப்பு தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளேன்.

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், அவர்களது படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.

    அமலாக்கத்துறை மீது நீதிமன்றத்தின் கண்டனம் தெரிவித்த நீதிபதியின் கருத்து நியாயமானது.

    எப்போது டெல்லிக்கு வந்தாலும் மரியாதை நிமித்தமாக சோனியா, ராகுலை சந்திப்பது வழக்கம்.

    என்னிடம் வெள்ளைக் குடையும் இல்லை, இபிஎஸ்-யிடம் இருப்பது போல காவிக் கொடியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×