search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nirbhaya"

    மேற்கு வங்காளத்தில் நிலத்தகராறு காரணமாக பெண்ணை கற்பழித்து, கொடூரமாக தாக்கிய உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். #WestBengal
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை கண்ட ரிக்‌ஷா ஓட்டுனர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது உறவினருக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவம் நடந்த அன்று நிலத்தகராறு குறித்து சமாதான பேச்சுவார்த்தைக்கு என உறவினர் அழைத்ததாக அந்த பெண் சென்றுள்ளார். அப்போது உறவினர் அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதுமட்டுமின்றி, அவரது பெண் உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடுமையான சித்திரவதைகளை செய்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கற்பழித்த அந்த உறவினரையும், அவருக்கு உதவியாக இருந்த நபரையும் கைது செய்துள்ளனர். டெல்லியில் இளம்பெண் நிர்பயாவுக்கு நடந்ததுபோல அரங்கேற்றப்பட்ட இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #WestBengal
    டெல்லி மாணவி நிர்பயா வழக்கின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவரது தந்தை செய்தியாளர்களை சந்தித்தார். #NirbhayaVerdict
    புதுடெல்லி:

    மரண தண்டனையை எதிர்த்து டெல்லி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்துள்ள சுப்ரீம் கோர்ட் அவர்களின் மரண தண்டனையை இன்று உறுதி செய்துள்ளது.

    இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் வாசலில் நிரூபர்களுக்கு பேட்டியளித்த நிர்பயாவின் தந்தை 'இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் முன்னர் அளித்த தீர்ப்பில் மறு ஆய்வு என்ற பெயரில் கால தாமதம் ஏற்படுத்தப்பட்டது.

    இதனால், பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மேலும் அதிகமாகி உள்ளது. தற்போது மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு மரண தண்டனையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், காலம் தாழ்த்தாமல், குற்றவாளிகளை விரைவாக தூக்கிலிட வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.



    இதேபோல், சுப்ரீம் கோர்ட்டில் இன்றைய தீர்ப்பை வரவேற்றுள்ள நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, நீதிமன்றத்தின் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்பட்டு விட்டதாக தெரிவித்துள்ளார். நீதி தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், விரைவாக தூக்கு தண்டனையை நிறைவேற்றி இதர பெண்கள் மற்றும் குழந்தைகளை காக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  #NirbhayaVerdict
    ×