search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NEET candidates"

    நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். #NEET #RahulGandhi #CBSE
    புதுடெல்லி:

    மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு, கடந்த மே 6-ந் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    அதில், “நீட் தேர்வு எழுதியவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர், செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள், ஒரு இணையதளத்தில் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அவர்களின் தனிநபர் ரகசியத்தை மீறும் செயல். இதை தடுக்க போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்திலாவது, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும். இந்த திருட்டு பற்றி விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.  #NEET #RahulGandhi #CBSE #tamilnews 
    தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி பிறப்பித்த ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. #NEET #NEETGraceMarks #CBSEAppeal
    புதுடெல்லி:

    நீட் தேர்வின்போது தமிழ் வினாத்தாளில் 49 வினாக்கள் பிழையாக இருந்ததால், கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 கருணை மதிப்பெண்கள் வழங்கும்படி சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.

    மேலும் இந்த கருணை மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.



    இதனை எதிர்த்து சிபிஎஸ்இ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண் வழங்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இன்று தடை விதித்தது. #NEET #NEETGraceMarks #CBSEAppeal
    ×