என் மலர்
நீங்கள் தேடியது "மாணவர்களின் தகவல்கள் திருட்டு"
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார். #NEET #RahulGandhi #CBSE
புதுடெல்லி:
மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு, கடந்த மே 6-ந் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ‘நீட்’ தேர்வு நடத்திய சி.பி.எஸ்.இ.யின் தலைவர் அனிதா கர்வாலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “நீட் தேர்வு எழுதியவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர், செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள், ஒரு இணையதளத்தில் விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது, அவர்களின் தனிநபர் ரகசியத்தை மீறும் செயல். இதை தடுக்க போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்திலாவது, கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை உருவாக்க வேண்டும். இந்த திருட்டு பற்றி விசாரணை நடத்தி, இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். #NEET #RahulGandhi #CBSE #tamilnews