search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nannilam"

    • மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.
    • புத்தகரம், வவ்வாலடி, பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் உதவி செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் பிரபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்ல மாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர், ஆணைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதி விடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    நன்னிலம்:

    நன்னிலம் வட்டாரத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் ஐந்து நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருக பாஸ்கர் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

    129 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்வட்டார வளமைய மேற்பார்வை யாளர் நடேஷ் துரை வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் புஷ்பா நன்றி கூறினார்.

    • நன்னிலம் அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கோட்டூர், கேணிக்கரையை சேர்ந்தவர் 19 வயது பெண்.

    இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று இவரது பெற்றோர் கோவிலுக்கு சென்றனர். வீட்டில் மாணவி மட்டும் இருந்தார்.

    ஆனால் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் அங்கு மகளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து பேரளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    நன்னிலம் அருகே குடும்ப தகராறில் மருமகனை தாக்கிய மாமனார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தை அடுத்த நாகக்குடியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது24). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி உமாரஞ்சனி.

    கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் உமாரஞ்சனி கணவரை பிரிந்து அடவக்குடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அவரது தந்தை நடராஜன் மகளை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வீடு பூட்டி இருந்ததால் சங்கர் வேலை செய்யும் இடத்திற்கு சென்று வீட்டின் சாவியை கேட்டனர்.

    அப்போது சங்கர் சாவியை கொடுக்க மறுப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜன், அவரது உறவினர்கள் பக்கிரிசாமி, மருதுபாண்டி ஆகியோர் சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த சங்கர் நன்னிலம் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா வழக்குபதிவு செய்து சங்கரை தாக்கிய 3 பேரையும் தேடி வருகிறார்.

    ×