கல்லூரி மாணவி மாயம்

நன்னிலம் அருகே கல்லூரி மாணவி மாயமானார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
கல்லூரி மாணவி மாயம்
Published on

நன்னிலம்:

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கோட்டூர், கேணிக்கரையை சேர்ந்தவர் 19 வயது பெண்.

இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று இவரது பெற்றோர் கோவிலுக்கு சென்றனர். வீட்டில் மாணவி மட்டும் இருந்தார்.

ஆனால் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் அங்கு மகளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து பேரளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com