search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nagercoil murder"

    • அருண் மார்த்தாண்டன் அவரது நண்பர் நைனா புதூர் ராம்குமார் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். கத்தியாலும் குத்தி உள்ளனர்.
    • கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    என்.ஜி.ஓ.காலனி:

    குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் காட்டுவிளை கலைஞர் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவர் கடந்த 26-ந் தேதி சொத்தவிளையில் வசிக்கும் தனது நண்பர் அருண் மார்த்தாண்டன் (31) வீட்டுக்குச் சென்றார். அங்கு பேசிக் கொண்டிருந்த போது 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது.

    அப்போது அருண் மார்த்தாண்டன் அவரது நண்பர் நைனா புதூர் ராம்குமார் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். கத்தியாலும் குத்தி உள்ளனர்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மணிகண்டன் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து சுசீந்தரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காந்திமதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.

    இதனைத் தொடர்ந்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர்.

    இதற்கிடையே மணிகண்டனை தாக்கியதாக ராம்குமார் மற்றும் அருண் மார்த்தாண்டன் இருவரையும் போலீசார் பிடித்தனர். ராம்குமாருக்கு காயங்கள் இருந்ததால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு போலீஸ் காவலில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை மணிகண்டன் இறந்ததால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. மேலும் போலீஸ் காவலில் இருந்த ராம்குமார், அருண்மார்த்தாண்டன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    அஞ்சுகிராமம் அருகே குடும்ப தகராறில் கணவரால் வெட்டப்பட்ட பேராசிரியை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாகர்கோவில்:

    அஞ்சுகிராமம் கனகப்ப புரத்தைச் சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட் (வயது 40). இவரது மனைவி ஜெகதீஷ் ஷைனி (33), இவர் குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளரின் சகோதரி ஆவார்.

    இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜெகதீஷ் ஷைனி பால்குளத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக வேலை பார்த்துவந்தார். கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த டால்டன் செல்வ எட்வர்ட், அவரது மனைவி ஜெகதீஷ் ஷைனியை சரமாரியாக வெட்டினார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஜெகதீஷ் ஷைனிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நினைவு திரும்பாமலேயே இருந்த அவர், நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். பலியான ஜெகதீஷ் ஷைனியின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படுகிறது.

    ஏற்கனவே மனைவி ஜெகதீஷ் ஷைனியை வெட்டி விட்டு தப்பியோடிய கணவர் டால்டன் செல்வ எட்வர்ட் கர்நாடகா மாநிலத்தில் ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    கணவன்-மனைவி இருவரும் பலியானதையடுத்து அவர்களது குழந்தைகள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
    நாகர்கோவிலில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து அதிக மது கொடுத்து சகோதரனை கொன்ற சகோதரியை போலீசார் கைது செய்தனர்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலப் பெருவிளையைச் சேர்ந்தவர் நீலசாமி (வயது 43). திருமணம் ஆகாதவர். கல்லூரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். பின்னர் அந்த வேலையை விட்டு கூலி தொழில் செய்தார்.

    நீலசாமி அதே பகுதியில் உள்ள தனது சகோதரி அமராவதி வீட்டில் தங்கியிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென மாயமான நீலசாமி, கோட்டவிளையில் உள்ள கிணற்றில் கொலை செய்யப்பட்டு பிணமாக மிதந்தார். அவரது 2 கைகளும் பின்புறம் லுங்கியால் கட்டப்பட்டு கிடந்தது.

    ஆசாரிப்பள்ளம் போலீசார் நீலசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். நீலசாமிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் குடிபோதை தகராறில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இதற்காக நீலசாமியின் நண்பர்கள், அவருடன் சேர்ந்து மது அருந்துபவர்கள் என 5-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.

    நீலசாமி மாயமானது பற்றி அவரது சகோதரி அமராவதி, போலீஸ் நிலையத்தில் எந்தவொரு புகாரும் செய்யாமல் இருந்தார். நீலசாமி பிணம் மீட்கப்பட்டதும் உடனடியாக போலீஸ் நிலையத்துக்கு சென்று கொலை செய்யப்பட்டவர் தனது சகோதரர் நீலசாமி தான் என அவர் அடையாளம் காட்டினார்.

    இதனால் அமராவதி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அமராவதி வீட்டுக்கு அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத் (48) என்பவர் அடிக்கடி சென்று வந்ததும் தெரியவந்தது. அதன்பேரில் அமராவதியையும், பிரசாத்தையும் பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டு நீலசாமியை கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது.

    அமராவதி கணவரை இழந்தவர். தனிமையில் இருந்த அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்தது. அதே பகுதியைச் சேர்ந்த பிரசாத்தும் அவருடன் உல்லாசமாக இருந்தார்.

    பிரசாத்துக்கு அதே பகுதியைச் சேர்ந்த நெருங்கிய உறவுப்பெண் ஒருவருடன் முறைதவறிய உறவு இருந்துள்ளது. அந்த பெண்ணையும் பிரசாத், அமராவதி வீட்டுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தார். இதற்கு அமராவதி துணையாக இருந்துள்ளார்.

    இதுதவிர அமராவதிக்கு சென்னையில் பணியாற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயில் வார்டன் ஒருவருடனும் தொடர்பு இருந்துள்ளது. அவர் ஊருக்கு வரும் சமயத்தில் அமராவதி வீட்டுக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்தார்.

    அமராவதியின் நடத்தை சரியில்லாததை அறிந்த நீலசாமி வேதனைப்பட்டார். அமராவதியை அழைத்து பல முறை அவர் கண்டித்தார். பிரசாத்தையும் இனி வீட்டுக்கு வரக்கூடாது என சத்தம் போட்டார்.

    நீலசாமியின் கண்டிப்பால் அமராவதியும், பிரசாத்தும் அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. தங்கள் கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் நீலசாமியை கொன்று விட்டால் நிம்மதியாக தங்கள் தொடர்பை தொடரலாம் என அமராவதியும், பிரசாத்தும் திட்டமிட்டனர்.

    நீலசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் அவருக்கு மது வாங்கி கொடுத்து தீர்த்துக்கட்டலாம் என அவர்கள் முடிவு செய்தனர். சம்பவத்தன்று நீலசாமிக்கு மது வாங்கி தருவதாக ஆசைக்காட்டி கோட்டவிளை பகுதிக்கு அவரை பிரசாத் அழைத்துச் சென்றார். அங்கு நீலசாமிக்கு பிரசாத் மது ஊற்றிக் கொடுத்தார். தன்னை கொல்வதற்காக பிரசாத் மதுவாங்கிக் கொடுப்பதை அறியாத நீலசாமி, அளவுக்கு அதிகமாக மது குடித்து மயக்கநிலைக்குச் சென்றார்.

    அப்போது நீலசாமியை பிரசாத் அடித்துக் கொலை செய்தார். பின்னர் நீலசாமி அணிந்திருந்த லுங்கியால் அவரது 2 கைகளையும் பின்புறமாக கட்டி கிணற்றில் வீசி விட்டி தப்பிச் சென்றுள்ளார்.

    இந்த விவரங்களை அமராவதியும், பிரசாத்தும் போலீசாரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள்.

    கைதான பிரசாத்துக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
    ×