search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mumbai Fire"

    மும்பை கமலா மில்ஸ் அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வரும் அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. #Mumbaifire
    மும்பை:

    மும்பை கமலா மில்ஸ் வளாகம் அருகே பல தளங்கள் கொண்ட பிரமாண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் ஒரு தளத்தில் இருந்து இன்று காலை புகை எழுந்தது. பின்னர் சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே 5 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை.

    இதேபோல் நேற்று மும்பை திலக் நகரில் உள்ள 16 மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த வாரம் அந்தேரி புறநகர் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதே கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள இரண்டு விடுதிகளில் தீப்பிடித்ததில் 14 பேர் மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. #MumbaiFire
    மும்பை செம்பூர் திலக்நகர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியானார்கள். இது தொடர்பாக போலீசார் கட்டுமான ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #Mumbai MumbaiFire
    மும்பை :

    மும்பை செம்பூர் திலக்நகர் பகுதியில் சர்கம் என்ற 16 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் 11-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இந்த மரத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்தது. இந்த தீ கொழுந்துவிட்டு எரிந்து மளமளவென 10-வது மாடிக்கும் பரவியது.

    இதையடுத்து வீடுகளில் இருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். கீழ் மாடிகளில் இருந்த மக்கள் தரை தளத்திற்கும், மேல் மாடிகளில் இருந்த மக்கள் மொட்டை மாடிக்கும் ஓட்டம் பிடித்தனர்.

    தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். எனினும் குறுகிய சாலை மற்றும் அந்த பகுதியில் நிறுத்தியிருந்த வாகனங்களால் விபத்து நடந்த கட்டிடத்திற்கு அவர்களால் உடனடியாக செல்ல முடியவில்லை. இந்தநிலையில் தீப்பிடித்த ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் மேலும் தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.


    தீ விபத்தில் பலியானவர்களின் உறவினர்கள் கதறி அழுத காட்சி.


    இந்தநிலையில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் கட்டிடத்தில் சிக்கி இருந்தவர்ளை மீட்டனர். இதில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவர்கள் ராஜவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சுனிதா ஜோஷி (வயது72), பால்சந்திர ஜோஷி (72), சுமன் ஜோஷி (83), சரளா (52), லெட்சுமி பென் (83) ஆகிய 5 பேர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இதில் 5 பேரும் மூச்சுத்திணறலால் பலியானதாக ராஜவாடி மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் வித்யா தாக்கூர் கூறினார். மேலும் 3 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கட்டிடத்தில் உரிய தீத்தடுப்பு கருவிகள் இல்லாததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள 5 ஆண்டுகளாக அதன் ஒப்பந்ததாரரிடம் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துவந்ததாகவும், ஆனால் எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து திலக்நகர் போலீசார் தீ விபத்து குறித்து கட்டிட ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Mumbai #MumbaiFire
    மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவர்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். #MumbaiFire
    மும்பை:

    மும்பையின் புறநகரில் உள்ள செம்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தின் பி- பிரிவு அடுக்குமாடி கட்டிடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரு தளத்தில் பற்றிய தீ, சிறிது நேரத்தில் கொழுந்து விட்டு எரிந்து மற்ற தளங்களுக்கும் பரவியது.

    தகவல் அறிந்ததும் 8 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுஒருபுறமிருக்க மீட்பு பணியும் நடைபெற்றது. தீப்பிடித்த தளத்தில் இருந்து முதியவர்கள் உள்ளிட்ட சிலர் கடுமையான தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 4 முதியவர்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.



    நள்ளிரவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் கடுமையான வெப்பம் நிலவியதால் தண்ணீர் பீய்ச்சியடித்து குளிர்விக்கும் பணிகள் நடைபெற்றன.

    தீ அணைக்கும் பணியின் போது, தீ அணைப்பு வீரர் ஒருவரும் காயம் அடைந்தார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தீ எரிந்து கொண்டிருக்கும் போது, குடியிருப்பில் இருந்த சிலிண்டர் ஒன்று வெடித்ததால், தீயின் உக்கிரம் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #MumbaiFire
    மும்பையின் அந்தேரி பகுதியில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது. #MumbaiFire #ESICKamgarHospital
    மும்பை:

    மும்பையின் அந்தேரி பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான ‘காம்கார்’ என்ற தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளது.

    5 மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனையின்4-வது மாடியில் நேற்று மாலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியதால், அதிகளவில் கரும்புகை வெளியேறி சிறிது நேரத்திலேயே மருத்துவமனை பகுதி முழுவதையும் புகை மண்டலம் சூழ்ந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், உள்நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேற முயன்றார்கள்.

    புகையின் காரணமாக பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. தகவல் அறிந்து 12 தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் 4 மணிநேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.



    தீயணைக்கும் பணி ஒருபுறம் நடக்க, மறுபுறம் ராட்சத கிரேன் மூலம் மருத்துவமனைக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். இதில், 141 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

    மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். #MumbaiFire #ESICKamgarHospital

    மகராஷ்டிரா மாநிலம் மும்பையின் போரிவாலி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் பெண் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

    மும்பை:

    மகராஷ்டிரா மாநிலம் மும்பையை ஒட்டியுள்ள போரிவாலி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் நேற்று மாலை தீடீரென தீவிபத்து ஏற்பட்டது.  இந்த தீவிபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இரண்டு பெண்கள் சிக்கிக்கொண்டனர்.

    இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்பு துறையினர், நீண்ட போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். 

    ஆனால் தீயினால் ஏற்பட்ட அதிக அளவிலான புகையை சுவாசித்ததால் ஜெயா காரசியா (55) என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார், மற்றொருவரான லக்சுமி அரோலா (35) படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தீபிகா படுகோனே தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீபத்தில் சிக்கியிருப்பதாக வந்த தகவலுக்கு நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். #DeepikaPadukone #MumbaiFire
    மராட்டிய மாநிலம் மும்பையின் வோர்லி பகுதியில் 33 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. குடியிருப்பின் மேல் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறை வீரர்கள் 10 வாகனங்கள், சிறப்பு உபகரணங்களுடன் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். 

    அடுக்குமாடி குடியிருப்பின் மேல்தளத்தில் பிடித்துள்ள தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வரும் தகவல்கள் குறிப்பிடுகிறது. குடியிருப்பு கட்டடத்தில் இருந்து 90 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர், தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 



    இந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில்தான் இந்தி நடிகை தீபிகா படுகோனே குடியிருக்கிறார். தீ விபத்து ஏற்பட்டதும் ரசிகர்கள் பலர் தீபிகாவிற்கு என்ன ஆனது என்று பதற்றம் அடைந்தனர். இந்நிலையில் தீபிகா படுகோனே தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் பாதுகாப்பாக உள்ளேன். உங்கள் அனைவருக்கும் நன்றி, தங்களுடைய உயிரை பணயம் வைத்து போராடிவரும் தீயணைப்பு படை வீரர்களுக்காக பிரார்த்திப்போம்’ என பதிவு செய்துள்ளார். 
    ×