search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MotorVehicleAmendmentBill"

    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து மன்னார்குடியில் அரசு பஸ்கள் ஓடவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    தஞ்சாவூர்:

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவிற்கு எதிராகவும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள், அனைத்து தொழிற்சங்கங்கத்தினர் இன்று ஒரு நாள் மட்டும் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், ஆட்டோ, டெம்போவேன், வாடகை கார் என சாலை போக்குவரத்து துறையில் சம்மந்தப்பட்டுள்ள தொழிலாளர்கள், உரிமையாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    இதனால் பல்வேறு இடங்களில் வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆனால் டெல்டா மாவட்டங்களில் வழக்கம் போல் வாகன போக்குவரத்து சீராக உள்ளது. இதனால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    தஞ்சை மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் வழக்கம் போல் அரசு பஸ்கள் இயங்கின. இதேபோல் ஆட்டோக்கள், வேன்கள் இயங்கப்பட்டன. இதனால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    தஞ்சையில் இன்று காலை சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமையில் தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை பேரணி நடத்தப்பட்டது.

    இந்த பேரணியில் ஆட்டோ, வேன் ஓட்டுனர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் வாகனங்களுடன் கலந்து கொண்டு பேரணியில் ஈடுபட்டனர்.

    கும்பகோணத்தில் இன்று அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்கியது. ஆனால் லாரிகள், வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சில இடங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    திருவாரூர் மாவட்டத்திலும் இன்று அரசு பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம் போல் இயங்கின.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் மொத்தம் 84 பஸ்கள் உள்ளன. இதில் இன்று 44 பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்த பஸ்கள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

    பாதி எண்ணிக்கையில் மட்டுமே அரசு பஸ்கள் இயக்கப்பட்டதால் மன்னார் குடியில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

    நாகை மாவட்டத்தில் சீர்காழி, வேதாரண்யம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்திருந்த நிலையில் வழக்கம் போல் அரசு பஸ்கள், ஆட்டோ, வேன், லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது.


    தொழிற்சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்த போராட்டத்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. #MotorVehicleStrike, MotorVehicleAmendmentBill,

    திண்டுக்கல்:

    மோட்டார் வாகன வரைவு சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

    இதில் அரசு போக்கு வரத்துக்கழக ஊழியர்கள், ஆட்டோ, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் பங்கேற்கப் போவதாக அறிவித்தனர். திண்டுக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்ட பகுதியில் 922 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    டிரைவர், கண்டக்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் 5400 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் பெரும்பாலான தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ள போதும் வழக்கமாக பஸ்கள் இயங்கின.

    இது குறித்து போக்குவரத் துக்கழக அதிகாரிகள் தெரிவிக்கையில், 1700 பேர் பணிக்கு வந்தாலே அனைத்து பஸ்களையும் இயக்க முடியும். இதனால் ஒரு நாள் வேலை நிறுத்தபோராட்டம் என்பது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

    திண்டுக்கல் மண்டலத்தில் வழக்கமான பஸ் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பஸ்களும் வழக்கமாக செல்கிறது என்று தெரிவித்தார். ஆனால் போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆட்டோ தொழிற்சங்கத்தினர் தங்கள் கோரிக்கை விளக்க அட்டையை ஆட்டோவில் ஒட்டி போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதேபோல வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வந்த டூரிஸ்ட் வாகனங்களும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒர்க்ஷாப்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், மோட்டார் வாகன அலுவலக பணியாளர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டங்கள் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் ஓடவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    சேலம்:

    மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 7-ந் தேதியான இன்று ஆட்டோ, டாக்சிகள், வேன்கள், மினி சரக்கு வாகனங்கள் ஓடாது என்று மோட்டார் வாகன அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தது. இதே போல அரசு பஸ்களையும் இயக்க விடமட்டோம் என அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது. ஆனால் இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி உள்பட பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின.

    சேலம் மாநகரில் வழக்கமாக 1000-த்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படும். இன்று வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான ஆட்டோக்கள் ஒடவில்லை. அந்த ஆட்டோக்கள் வரிசையாக திருப்பி நிறுத்தப்பட்டிருந்தன.

    இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே போல வாடகை கார்கள், வேன்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டன. சேலம் புறநகர் பகுதிகளில் குறைந்த அளவு ஆட்டோக்கள் ஓடின.

    கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மோட்டார் வாகன ஊரிமையாளர்கள், டிரைவர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடியது. நாமக்கல் நகரில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடியது. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். வாடகை கார் மற்றும் வேன்கள் ஓடவில்லை. அந்த கார்கள் நாமக்கல்லில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் பஸ் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    ஊத்தங்கரை:

    மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி இன்று தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தனியார் பஸ் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இதனால் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் இருந்து தருமபுரி, திருவண்ணாமலை, அரூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பெரும்பாலான தனியார் பஸ்கள் இயங்கவில்லை.

    இதன் காரணமாக இன்று காலை பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

    தொழிற்சங்கத்தினர் ஸ்டிரைக் காரணமாக பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கவில்லை. இன்று காலை போச்சம்பள்ளி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    தருமபுரியில் இன்று வழக்கம்போல அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. 50 சதவீத ஆட்டோக்கள் இயங்கின. அந்த ஆட்டோக்களையும் ஓட்டாமல் நிறுத்தி வைக்குமாறு தொழிற்சங்க நிர்வாகிகள் ஆட்டோ டிரைவர்களை கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் நோட்டீசும் வழங்கினர்.

    தருமபுரி மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்த 28 தனியார் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் இன்று மூடப்பட்டன.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து பெங்களூருவுக்கு வழக்கம் போல தமிழக மற்றும் கர்நாடக அரசு பஸ்கள் இயங்கின.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் இன்று வழக்கம் போல அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயங்கின. லாரிகள் மற்றும் ஆட்டோக்களும் ஓடின.

    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து வேலூர்-திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 சதவீத பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    வேலூர்:

    மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மோட்டார் தொழில் தொடர்புடைய அனைத்து சங்க கட்டமைப்புகளும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. வேலூர் மாவட்டத்தில் 20 சதவீதம் ஆட்டோ, வேன்கள் இன்று ஓடவில்லை.

    போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சேர்ந்த அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நேற்று இரவு 50 சதவீதத்துக்கு அதிகமான பஸ்கள் ஓடவில்லை. இன்று காலை 20 சதவீத அரசு பஸ்கள் இயக்கபடவில்லை.

    ஆனால் அரசு பஸ்கள் அனைத்தும் இயக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் கிராமபுறங்களுக்கு செல்லும் சில பஸ்கள் நிறுத்தபட்டுள்ளன.

    வேலூர், அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை, குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் உள்ளிட்ட நகர் புறங்களில் பஸ் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஆட்டோக்கள் ஓடாததால் பொதுமக்கள் பாதிக்கபட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆட்டோ பஸ்கள் வழக்கம் போல் ஓடியது.

    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் மற்றும் டாக்சிகள் ஓடவில்லை #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    கோவை:

    மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ, டாக்சிகள், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் இன்று இயக்கப்படாது என அனைத்து சங்க கூட்டமைப்பு அறிவித்தது.

    இதேபோல அரசு பஸ்களையும் இயக்க மாட்டோம் என அரசு போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்தது. இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றவில்லை.

    கோவை மாவட்டத்தில் இன்று காலை அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின. காலை 7 மணி நிலவரப்படி மாநகரில் 90 சதவீத பஸ்களும், மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 97 சதவீத பஸ்களும் இயக்கப்பட்டது. காலை 8 மணி நிலவரப்படி அனைத்து டெப்போக்களில் இருந்தும் பஸ்கள் வழக்கம் போல முழுமையாக இயக்கப்பட்டதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் இந்த வேலை நிறுத்தத்தையொட்டி கோவையில் இருந்து கேரளாவுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. உக்கடம், காந்திபுரத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர், கொச்சி உள்ளிட்ட கேரளாவின் பல்வேறு இடங்களுக்கு 25-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.

    இன்று பஸ்கள் இயக்கப்படாததால் டெப்போவில் நிறுத்தப்பட்டன. கேரளாவில் இருந்தும் கோவைக்கு வரக் கூடிய 20 கேரள அரசு பஸ்களும் இன்று இயக்கப் படவில்லை. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    வேலைநிறுத்த போராட்டத்தையொட்டி கோவை மாவட்டத்தில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்பட வில்லை என அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகி சுகுமாரன் கூறினார்.

    இதேபோல கால்டாக்சி, வேன், மேக்சி கேப், டெம்போ, லாரி என 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை. இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில் காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.

    இதேபோல டூரிஸ்ட் வேன், டாக்சி, டெம்போ தொழிலாளர்கள் டவுன்ஹாலில் மறியல் போராட்டம் நடந்தது.

    நீலகிரி மாவட்டம் குன்னூர், மேல் குன்னூர், கீழ் குன்னூர், வெலிங்டன், சிம்ஸ் பூங்கா, ஒட்டு பட்டறை, அரவங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் ஓடவில்லை.

    இதே போல் சுற்றுலா டாக்சிகள், வேன்கள் போன்றவையும் இயங்கவில்லை. அவைகள் ஸ்டாண்டில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆட்டோக்கள் ஓடாததால் இன்று காலை பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

    வேன்கள், டாக்சிகள் இயங்காததால் சுற்றுலா பயணிகள் பல்வேறு இடங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

    ஊட்டியிலும் இன்று ஆட்டோக்கள், சுற்றுலா வேன்கள் குறைந்த அளவே இயங்கியது.

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஆட்டோக்கள், டாக்சிகள், வேன்கள் வழக்கம் போல் ஓடியது. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    ×