search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்கள் ஆட்டோக்கள் - வாடகை கார்கள் ஓடவில்லை
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்கள் ஆட்டோக்கள் - வாடகை கார்கள் ஓடவில்லை

    மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தைக் கண்டித்து சேலம், நாமக்கல் மாவட்டங்கள் ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் ஓடவில்லை. #MotorVehicleStrike #MotorVehicleAmendmentBill

    சேலம்:

    மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 7-ந் தேதியான இன்று ஆட்டோ, டாக்சிகள், வேன்கள், மினி சரக்கு வாகனங்கள் ஓடாது என்று மோட்டார் வாகன அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்தது. இதே போல அரசு பஸ்களையும் இயக்க விடமட்டோம் என அரசு போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்தது. ஆனால் இந்த போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கவில்லை.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, எடப்பாடி, சங்ககிரி உள்பட பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை அரசு பஸ்கள் வழக்கம் போல ஓடின.

    சேலம் மாநகரில் வழக்கமாக 1000-த்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படும். இன்று வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான ஆட்டோக்கள் ஒடவில்லை. அந்த ஆட்டோக்கள் வரிசையாக திருப்பி நிறுத்தப்பட்டிருந்தன.

    இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதே போல வாடகை கார்கள், வேன்களும் குறைந்த அளவே இயக்கப்பட்டன. சேலம் புறநகர் பகுதிகளில் குறைந்த அளவு ஆட்டோக்கள் ஓடின.

    கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் மோட்டார் வாகன ஊரிமையாளர்கள், டிரைவர்கள், தொழிற் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள்.

    நாமக்கல் மாவட்டத்தில் இன்று அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல ஓடியது. நாமக்கல் நகரில் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடியது. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். வாடகை கார் மற்றும் வேன்கள் ஓடவில்லை. அந்த கார்கள் நாமக்கல்லில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

    Next Story
    ×