search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motorcycles collision"

    • சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
    • நடராஜர் நகர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆறுமுகம் (65). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நடராஜர் நகர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது. இதில் கீழே விழுந்த ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சை க்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தச்சநல்லூர் ஊருடை யார்புரம் பகுதியை சேர்ந்த வர் பாலாஜி (வயது 50). இவர் கருவந்தாவில் நூலகராக பணிபுரிந்து வந்தார்.
    • எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பாலாஜி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    நெல்லை:

    தச்சநல்லூர் ஊருடை யார்புரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). இவர் தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள கருவந்தாவில் நூலகராக பணிபுரிந்து வந்தார்.

    இன்று காலை பாலாஜி பாளை தியாகராஜ நகரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் பொதிகை நகர் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பாலாஜி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தன லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

    • தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.
    • அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

    சேலம்:

    சேலம் அயோத்தியா பட்டணம் அருகே மேட்டுப்பட்டி தாதனூர் அடுத்த முட்டை கடை பகுதியை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் பாலாஜி என்கிற பாலகிருஷ்ணன் (வயது 22). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எருமாபாளையம் அருகே சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணனை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியி லேயே பாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து கிச்சிப்பா ளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×