பாளையில் இன்று காலை மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நூலகர் சாவு

தச்சநல்லூர் ஊருடை யார்புரம் பகுதியை சேர்ந்த வர் பாலாஜி (வயது 50). இவர் கருவந்தாவில் நூலகராக பணிபுரிந்து வந்தார்.எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பாலாஜி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
பாளையில் இன்று காலை மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் நூலகர் சாவு
Published on

நெல்லை:

தச்சநல்லூர் ஊருடை யார்புரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 50). இவர் தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அருகே உள்ள கருவந்தாவில் நூலகராக பணிபுரிந்து வந்தார்.

இன்று காலை பாலாஜி பாளை தியாகராஜ நகரில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மோட்டார் சைக்கிளில் பொதிகை நகர் வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பாலாஜி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப் -இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் தன லட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com