ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் - பெயிண்டர் படுகாயம்

சம்பவத்தன்று இரவு ஆறுமுகம் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நடராஜர் நகர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது.
ஆறுமுகநேரியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல் - பெயிண்டர் படுகாயம்
Published on

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி காணியாளர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஆறுமுகம் (65). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆறுமுகநேரி பஜாரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். நடராஜர் நகர் விலக்கு அருகே செல்லும்போது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு சென்றது. இதில் கீழே விழுந்த ஆறுமுகம் படுகாயம் அடைந்தார். உடனடியாக சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சை க்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com