search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money jewellery robbery"

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் 2 வீடுகளில் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பாப்பிரெட்டிப்பட்டி:

    தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அமீர்பாய் காலனியை சேர்ந்தவர் ஜியாபுதீன் (வயது35) இவரது மனைவி சபீனா (30). இவர்களுக்கு பக்ருதீன் என்ற மகன் உள்ளார். ஜியாபுதீன் மோட்டார் மெக்கானிக்காக உள்ளார். 

    இவர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்று விட்டார். இவரது மனைவியும், மகனும் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இன்று காலை அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. 

    பீரோவில் இருந்த 1 லட்சத்து 67 ஆயிரம் ரொக்க பணம் மூன்றே கால் பவுன் நகைகள், ஒன்னேகால் கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளைடிக்கப்பட்டு இருந்தது.

    இதேபோல அவர்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் சேகர் என்பவர் வீட்டில் இருந்து ரூ.9 ஆயிரம் திருட்டு போய் இருந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கொள்ளை நடந்த ஜியாபுதீன் வீடு மலைஅடி வாரத்தில் ஒதுக்குபுறமாக உள்ளது. அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் மிகவும் குறைவாக இருக்கும். 

    இதை யாரோ திட்டமிட்டு நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடத்தில் தாய் வீட்டில் தூங்கிய புதுப்பெண்ணின் 10 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    ஆரல்வாய்மொழி:

    நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளமடம் வேம்பத்தூர் காலனியைச் சேர்ந்தவர் லதா (வயது 30). இவரது கணவர் யோவிந்த் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது.

    கணவர் வெளிநாட்டுக்கு சென்றதால் லதா தனது தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். நேற்று இரவு லதா மற்றும் பெற்றோர் வீட்டில் தூங்கினர். இன்று காலை அவர்கள் விழித்தெழுந்து பார்த்தபோது வீட்டின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை , ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம், 2 செல்போன்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. கொள்ளை போன நகைகள் அனைத்தும் புதுப்பெண்ணான லதாவுக்கு உரியவை ஆகும். அங்கிருந்த ஒரு ஜோடி கம்மல், ஒரு செயின், 3 மோதிரம், அரசு திருமண உதவியாக வழங்கிய 4 கிராம் தங்க நாணயம் ஆகியவற்றை கொள்ளையர்கள் எடுத்துச் சென்றிருந்தனர்.

    நகைகள் கொள்ளை போனதால் லதாவும், அவரது பெற்றோரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    இதேபோல லதா வீட்டின் பக்கத்து வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லதா வீட்டின் அருகே வசிப்பவர் கார்த்திக். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் அவரது மனைவி ஸ்டெபி மற்றும் கார்த்திக்கின் தாயார் வசித்து வருகிறார்கள்.

    அவர்கள் 2 பேரும் திங்கள் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இரவில் அவர்களது வீட்டில் புகுந்த கொள்ளையர்கள், வீடு முழுவதும் நகை, பணத்தை தேடியுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் சிக்கவில்லை. இதனால் சூட்கேஸ் உள்ளிட்ட பொருட்களை வீட்டு முன்பு கொண்டு வந்து போட்டு விட்டு தப்பிச் சென்றனர். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ் பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த 2 வீடுகளிலும் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. கொள்ளையர்கள் உள்ளூரைச் சேர்ந்தவர்களா? அல்லது யார்? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

    திருச்சி அருகே மருந்து கடை உரிமையாளர் வீட்டில் ரூ.8 லட்சம் நகை -பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    துறையூர்: 

    திருச்சி மாவட்டம்  துறையூர் சாமிநாதன் நகரை சேர்ந்தவர் நம்பிராஜன். இவர் துறையூர் பெரிய கடைவீதியில் மருந்து கடை வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக ஜவுளிகள் எடுக்க திருச்சிக்கு நம்பிராஜன் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சென்றார். ஜவுளிகள் வாங்கி விட்டு இரவு வீடு திரும்பினார்.

    வீட்டின் அருகே வந்த போது திடீரென 2 மர்ம நபர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து , கார் ஒன்றில் ஏறி தப்ப முயன்றனர். இதனைப்பார்த்த நம்பிராஜன் மற்றும் அவரது உறவினர்கள்  அதிர்ச்சியடைந்ததோடு, மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். இருப்பினும் அவர்கள் காரை எடுத்து தப்பி சென்று விட்டனர். 

    இதையடுத்து நம்பிராஜன் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகை மற்றும்  ரூ.35ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும்.

    இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசில் நம்பிராஜன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து   சென்று விசாரணை நடத்தினர்.  மேலும் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்து கொள்ளையர்களை பிடிக்க  உத்தரவிடப்பட்டது. ஆனாலும் கொள்ளையர்கள் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி சென்று விட்டனர். அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    விமானப்படை அதிகாரி வீட்டில் 137 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல்:

    இரணியல் அருகே வில்லுக்குறி காரவிளை பகுதியை சேர்ந்தவர் வேணு (வயது 59). ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி. இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் குடும்பத்தோடு திருவனந்த புரத்திலும், மகள் இரணியல் அருகே மல்லங்கோடு பகுதியிலும் வசித்து வருகிறார்கள்.

    வேணுவின் மனைவி திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று இருந்தார். வேணு நேற்று காலை மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து வீட்டை பூட்டிவிட்டு நாகர்கோவிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

    பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. அதில் இருந்த நகைகளும், பணமும் திருடப்பட்டிருந்தது.

    வீட்டில் இருந்த 137 பவுன் நகை மற்றும் ரூ.26 ஆயிரம் ரொக்கப்பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று இருந்தனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து இரணியல் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ் பெக்டர் சுதேசன், சப்-இன்ஸ் பெக்டர் பிச்சை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத் தினார்கள்.

    கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். 2 கைரேகைகள் சிக்கி உள்ளது. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை நாய் மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    கொள்ளை சம்பவம் குறித்து வேணு கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    வேணு வீட்டில் இருந்து வெளியே செல்வதை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பவத்தின் போது வீட்டில் இருந்த வேணுவினுடைய நாயும் குறைக்க வில்லை. எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் தெரிந்த நபர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ×