search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MKAzhagiri"

    • உதயநிதி ஸ்டாலின் வருகையை அடுத்து மு.க.அழகிரியின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர்.
    • இந்த சந்திப்பால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர்.

    மதுரை

    தமிழக அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காக நேற்று மதுரை வந்தார்.

    பின்னர் மதுரை சத்திய சாய் நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரியும், தனது பெரியப்பாவுமான மு.க. அழகிரி இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து சால்வை அணி வித்து வாழ்த்து பெற்றார்.

    உதயநிதி ஸ்டாலின் வருகையை அடுத்து மு.க. அழகிரியின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர். வாசலில் வந்து வரவேற்ற மு.க. அழகிரி உதயநிதியை இன்முகத்துடன் வரவேற்று தோளில் கையை போட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இதை தொடர்ந்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

    காந்தி அழகிரியும் உதயநிதியை நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி, காந்தி அழகிரி ஆகியோரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.

    பின்னர் மு.க.அழகிரி தன்னுடன் இருந்த ஆதரவாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மேற்கு மண்டல தலைவர் சின்னான் மற்றும் ஆதரவாளர்கள் உதயகுமார், எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, இசக்கி முத்து, கோபிநாதன் ஆகி யோர் உதயநிதி ஸ்டாலி னுக்கு சாலை அணிவித்த னர்.

    பின்னர் வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    நான் அமைச்சரான பிறகு எனது பெரியப்பாவை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளேன். அவரும் மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்று வாழ்த்தியிருக்கிறார். நான் சிறுவயதில் இருந்தே எனது பெரியப்பாவுடன் பாசத்துடன் வளர்ந்தவன். அதே பாசத்தை எப்போதும் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து மு.க. அழகிரி கூறியதாவது-

    உதயநிதியும் எனது மகன் தான். சிறுவயதில் இருந்தே அவன் என்னுடன் பாசமாக பழகுவான்.இப்போது அமைச்சராக ஆகி இருக்கிறான். எனவே என்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நானும் மனதார வாழ்த்தி உள்ளேன்.

    எனது தம்பியும் முதல்-அமைச்சராக இருக்கிறார். எனது மகனும் (உதயநிதி) அமைச்சராக இருக்கிறார். இதைவிட எனக்கு என்ன வேண்டும்? நான் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து நிருபர்கள் தி.மு.க.வில் மீண்டும் சேருவீர்களா? என்று மு.க.அழகிரியிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி இதுபற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

    மு.க.அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர். விரைவில் மு.க.அழகிரி தி.மு.க.வில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

    மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க. அழகிரி பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். #Parliamentelection #DMK #MKAzhagiri

    மதுரை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி மகனும், முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் அவரது நிலைப்பாட்டை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த மு.க.அழகிரியை இன்று நிருபர்கள் சந்தித்தனர்.

    அப்போது அவரிடம் பாராளுமன்ற தேர்தலில் உங்களது நிலைப்பாடு என்ன? என்று கேட்டனர். அதற்கு அவர், அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஒருவாரம் கழித்து உங்களிடம் (நிருபர்களிடம்) நானே விரிவாக பேசுகிறேன் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் வெங்கடேசன் மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் உங்களை சந்தித்து ஆதரவு கேட்பதாக கூறி உள்ளாரே? என்று மு.க.அழகிரியிடம் கேட்டபோது, மரியாதை நிமித்தமாக அவர் என்னை சந்தித்தால் சந்திப்பேன். அதில் தவறில்லை என்று கூறினார்.

    தி.மு.க. வெற்றி குறித்து கேட்டபோது, இதுகுறித்து ஒரு வாரத்திற்கு முன்பே தெரிவித்து விட்டேன் என்றார். #Parliamentelection #DMK #MKAzhagiri

    மு.க.அழகிரியை தி.மு.க. வில் மீண்டும் சேர்க்க அவரது ஆதரவாளர்கள் தொண்டர்களிடம் கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். #DMK #MKAzhagiri #Karunanidhi #MKStalin

    மதுரை:

    தி.மு.க.வின் தென் மண்டல அமைப்பு செயலாளராக இருந்தவர் மு.க.அழகிரி. முன்னாள் மத்திய மந்திரியான இவர் கடந்த 2014-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.

    அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்ற, பாராளுமன்ற  தேர்தல்களில் தி.மு.க.வுக்கு எதிரான நிலையை எடுத்தார் மு.க.அழகிரி. தனது ஆதரவாளர்களை மாற்றுக்கட்சிக்கு வாக்கு சேகரிக்க உத்தரவிட்டதால் தி.மு.க.வினருக்கும், மு.க.அழகிரி ஆதரவாளர்களுக்கும் சில இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த மாதம் 7-ந்தேதி மரணம் அடைந்த பிறகு மு.க.அழகிரி மீண்டும் தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என்ற பரபரப்பு நிலவி வந்தது.

    இதுதொடர்பாக தி.மு.க. செயல்தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினிடம் அவரது குடும்பத்தினரும், தி.மு.க. மேலிட தலைவர்களும் விவாதித்தனர். ஆனாலும் மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை.

    இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சென்னையில் கருணாநிதியின் நினைவிடத்திற்கு மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போதும் தி.மு.க. மீது தனது அதிருப்தியை மு.க.அழகிரி வெளிப்படுத்தினார்.

    தி.மு.க.வில் மீண்டும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று மு.க.அழகிரி விரும்பினாலும் அதற்கு கட்சி தலைமை பச்சைக்கொடி காட்டாத நிலையில் மதுரையில் அண்ணா, பெரியார் பிறந்த தினத்தில் அவர்களது சிலைகளுக்கு தனது ஆதரவாளர்களுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    மு.க.அழகிரியை தி.மு.க.வில் சேர்க்க வலியுறுத்தும் வகையில் அவரது முக்கிய ஆதரவாளரான முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் தலைமையில் தமிழகம் முழுவதும் தி.மு.க. தொண்டர்களிடம் கையெழுத்து பெற முடிவு செய்யப்பட்டது.


    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் மூலம் தி.மு.க. தொண்டர்களிடம் மு.க.அழகிரியை கட்சியில் சேர்க்க கையெழுத்து பெறப்பட்டு வருகிறது.

    கையெழுத்திடும் தொண்டர்களின் உறுப்பினர் அடையாள எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றையும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

    இன்னும் சில வாரங்களில் கையெழுத்து வேட்டை முடிக்கப்பட்டு அதனை தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைக்க மு.க.அழகிரி ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    இதனிடையே மு.க.அழகிரி நேற்று திருவாரூர் சென்று கருணாநிதியின் புகழஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தனிக்கட்சி தொடங்கும் திட்டம் இல்லை என்றும், எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்களிடத்தில் நிச்சயம் கேட்பேன் என்று குறிப்பிட்டார்.

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என குறிப்பிட்ட மு.க.அழகிரி, மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்க்கும்போது தேர்தலில் நின்றால் எனக்கு வெற்றி நிச்சயம் என்றும் கூறினார்.

    எனவே மு.க.அழகிரி திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அவரது ஆதரவாளர் பி.எம்.மன்னன் கூறியதாவது:-

    தி.மு.க.வின் வளர்ச்சிக்கு எத்தனையோ தியாகங்களை செய்தவர் அண்ணன் மு.க.அழகிரி. அவர் மீண்டும் கழகத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகிறார்.

    அவரது விருப்பத்தை நிறைவேற்றுகின்ற வகையில் லட்சக்கணக்கான தி.மு.க. தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

    மு.க.அழகிரிக்கு தொண்டர்கள் மத்தியில் உள்ள ஆதரவை கட்சி தலைமைக்கு எடுத்துக்காட்டுகின்ற வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் தொண்டர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற திட்டமிடப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இதுவரை பெறப்பட்ட சுமார் 10 ஆயிரம் தொண்டர்களின் கையெழுத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

    திருவாரூர் தொகுதியில் நேற்று அண்ணன் மு.க.அழகிரிக்கு பொது மக்கள் அளித்த உற்சாகத்தை பார்க்கும்போது அங்கு அவர் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

    அங்குள்ள தொண்டர்கள் நீங்கள்தான் தலைவர் கலைஞரின் சொந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.

    எனவே இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து மு.க.அழகிரி தேர்தல் சமயத்தில் நிச்சயம் முடிவை அறிவிப்பார். கலைஞரின் தொகுதியில் மு.க.அழகிரிக்கு உள்ள செல்வாக்கை நிரூபித்து காட்ட வேண்டும் என்ற ஆசை என் போன்ற தொண்டர்கள் அனைவருக்கும் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×