search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.வில்  மீண்டும் சேர திட்டமா?-மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி
    X

    மதுரையில் முன்னாள் மத்திய மந்திரியும், தனது பெரியப்பாவுமான மு.க.அழகிரியை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். அருகில் காந்தி அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    தி.மு.க.வில் மீண்டும் சேர திட்டமா?-மு.க.அழகிரி பரபரப்பு பேட்டி

    • உதயநிதி ஸ்டாலின் வருகையை அடுத்து மு.க.அழகிரியின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர்.
    • இந்த சந்திப்பால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர்.

    மதுரை

    தமிழக அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காக நேற்று மதுரை வந்தார்.

    பின்னர் மதுரை சத்திய சாய் நகரில் உள்ள முன்னாள் மத்திய மந்திரியும், தனது பெரியப்பாவுமான மு.க. அழகிரி இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து சால்வை அணி வித்து வாழ்த்து பெற்றார்.

    உதயநிதி ஸ்டாலின் வருகையை அடுத்து மு.க. அழகிரியின் வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க.வினர் திரண்டனர். வாசலில் வந்து வரவேற்ற மு.க. அழகிரி உதயநிதியை இன்முகத்துடன் வரவேற்று தோளில் கையை போட்டு வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். இதை தொடர்ந்து சால்வை அணிவித்து வாழ்த்தினார்.

    காந்தி அழகிரியும் உதயநிதியை நெற்றியில் முத்தமிட்டு வரவேற்றார். தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரி, காந்தி அழகிரி ஆகியோரது கால்களில் விழுந்து ஆசி பெற்றார்.

    பின்னர் மு.க.அழகிரி தன்னுடன் இருந்த ஆதரவாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். தொடர்ந்து முன்னாள் துணை மேயர் மன்னன், முன்னாள் மேற்கு மண்டல தலைவர் சின்னான் மற்றும் ஆதரவாளர்கள் உதயகுமார், எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, இசக்கி முத்து, கோபிநாதன் ஆகி யோர் உதயநிதி ஸ்டாலி னுக்கு சாலை அணிவித்த னர்.

    பின்னர் வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

    நான் அமைச்சரான பிறகு எனது பெரியப்பாவை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளேன். அவரும் மகிழ்ச்சியுடன் என்னை வரவேற்று வாழ்த்தியிருக்கிறார். நான் சிறுவயதில் இருந்தே எனது பெரியப்பாவுடன் பாசத்துடன் வளர்ந்தவன். அதே பாசத்தை எப்போதும் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து மு.க. அழகிரி கூறியதாவது-

    உதயநிதியும் எனது மகன் தான். சிறுவயதில் இருந்தே அவன் என்னுடன் பாசமாக பழகுவான்.இப்போது அமைச்சராக ஆகி இருக்கிறான். எனவே என்னை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். நானும் மனதார வாழ்த்தி உள்ளேன்.

    எனது தம்பியும் முதல்-அமைச்சராக இருக்கிறார். எனது மகனும் (உதயநிதி) அமைச்சராக இருக்கிறார். இதைவிட எனக்கு என்ன வேண்டும்? நான் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து நிருபர்கள் தி.மு.க.வில் மீண்டும் சேருவீர்களா? என்று மு.க.அழகிரியிடம் கேட்டனர். இதற்கு பதில் அளித்த மு.க.அழகிரி இதுபற்றி அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.

    மு.க.அழகிரியுடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பால் மு.க. அழகிரி ஆதரவாளர்கள் உற்சாக மடைந்துள்ளனர். விரைவில் மு.க.அழகிரி தி.மு.க.வில் சேர்க்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது ஆதரவாளர் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

    Next Story
    ×