search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister anitha rathakrishnan"

    • மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.
    • அனிதா ராதாகிருஷ்ணன் தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்தார்.

    உடன்குடி:

    தி.மு.க., வில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது.

    முதல் கட்டமாக கிளை, வார்டு, பேரூர், ஒன்றிய தேர்தல் முடிந்து விட்டது. தற்போது மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் என தி.மு.க., தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    இந்த தேர்தலில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பதவிக்கு போட்டியிட தற்போது பொறுப்பாளராக இருக்கும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் மனு தாக்கல் செய்தார்.

    பின்னர் மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகய்யா ஆகியோர் உடனிருந்தனர்.

    • செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
    • திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர், மிகுந்த கவனமாக இருக்கிறார் என்று அமைச்சர் கூறினார்.

    உடன்குடி, செப்.19-

    உடன்குடி -செட்டியாபத்து சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் பிரிவில் தனியார்குழுமம் சார்பில் கட்டப்பட்ட நவீன பஸ் நிறுத்த திறப்பு விழா நடைபெற்றது.

    செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில்பிள்ளை, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய நவீன பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்படும் ஏராளமான திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர், மிகுந்த கவனமாக இருக்கிறார். பொது மக்கள் கிராமமக்கள் கொடுக்கும் அடிப்படை கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. வீடு தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம், வீடு தேடி மின்சார குறை தீர்ப்பு மையம், இப்படி பல திட்டங்கள் மக்களை தேடிச் சென்று நிறைவேற்றப்படுகிறது.

    இதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி முதலிடம் ஆக இருப்பதற்கு முன் உதாரணமாகும். நிகழ்ச்சியில்தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணிதுணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஓன்றிய செயலர் இளங்கோ, மாவட்ட சார்பு ஆணி நிர்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, சிராஜூதீன், ரவிராஜா, உடன்குடி பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், இளைஞர் அணியை சேர்ந்த பாய்ஸ், அஜய், செட்டியாபத்து ஜாம்புராஜ், பேரூராட்சி முன்னாள் உ றுப்பினர் முகமது சலீம், தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர் தலைவர் கலைஞர் கருணாநிதி.
    • கலைஞரின் 4-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. தலைவராக 50 ஆண்டுகள் திறம்பட பணியாற்றியவர் தலைவர் கலைஞர் கருணாநிதி. 1957-ம் ஆண்டு முதல் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை 19 ஆண்டுகளாக தமிழக முதல்-அமைச்சராகவும் பணியாற்றியவர் கலைஞர்.

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டவர்.

    தாய்மொழி தமிழுக்கு செம்மொழி பெருமையை பெற்றுத்தந்தவர். வளரும் தலைமுறையின் எதிர்காலத்தை வளப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்பட்ட தலைவர் கலைஞரின் 4-வது ஆண்டு நினைவு தினம் வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உள்ள கழக அமைப்புகளின் அனைத்து அலுவலகங்களிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வட்டங்களிலும், நகர, பேரூர் வார்டுகளிலும், ஒன்றியங்களில் உள்ள 199 ஊராட்சிகளில் முக்கிய சந்திப்புகளில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் உருவப் படத்தை அலங்கரித்து மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்த வேண்டும்.

    அந்தந்த பகுதிகளில் நடைபெறும் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கழக மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்ட மற்றும் அனைத்து நிர்வாகிகள், முன்னணியினர் பொதுமக்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
    • கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரியில் பூவரசூர் ஐக்கிய வாலிபர் சங்கத்தின் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாண சுந்தரம் தலைமை தாங்கினார்.ஊர் தலைவர் சிவசக்திவேல், தி.மு.க நகர செயலாளர் நவநீத பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூவரசூர் சக்திவேல் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக கால்நடைத்துறை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    தி.மு.க மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி நகர துணை செயலாளர் அகஸ்டின், வார்டு கவுன்சிலர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், செல்வம், சக்திவேல், வெங்கடேசன், தியாகராஜன், மேகவள்ளி, மணி, தூசி முத்து, முத்து பாண்டி, பாலகிருஷ்ணன், ராகவன், கண்ணன், மூக்காண்டி, சாமிகண்ணு, தினகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பூவரசூர் ஆதிபிராமணி பொடிப்பிள்ளையம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    ×