search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி
    X

    உடன்குடி அருகே நவீன பஸ் நிறுத்தத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்த போது எடுத்தபடம்.


    தமிழகத்தில் பொதுமக்களின் அடிப்படை கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது- அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி

    • செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார்.
    • திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர், மிகுந்த கவனமாக இருக்கிறார் என்று அமைச்சர் கூறினார்.

    உடன்குடி, செப்.19-

    உடன்குடி -செட்டியாபத்து சாலையில் உள்ள முத்துக்கிருஷ்ணாபுரம் பிரிவில் தனியார்குழுமம் சார்பில் கட்டப்பட்ட நவீன பஸ் நிறுத்த திறப்பு விழா நடைபெற்றது.

    செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், தொழிலதிபர்கள் ஞானராஜ் கோயில்பிள்ளை, ராம்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று புதிய நவீன பஸ் நிறுத்தத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் ஆட்சியில் நிறைவேற்றப்படும் ஏராளமான திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர், மிகுந்த கவனமாக இருக்கிறார். பொது மக்கள் கிராமமக்கள் கொடுக்கும் அடிப்படை கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. வீடு தேடி கல்வி, வீடு தேடி மருத்துவம், வீடு தேடி மின்சார குறை தீர்ப்பு மையம், இப்படி பல திட்டங்கள் மக்களை தேடிச் சென்று நிறைவேற்றப்படுகிறது.

    இதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி முதலிடம் ஆக இருப்பதற்கு முன் உதாரணமாகும். நிகழ்ச்சியில்தி.மு.க.வை சேர்ந்த மாநில மாணவரணிதுணை செயலர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி ராமஜெயம், உடன்குடி கிழக்கு ஓன்றிய செயலர் இளங்கோ, மாவட்ட சார்பு ஆணி நிர்வாகிகள் ராமஜெயம், மகாவிஷ்ணு, சிராஜூதீன், ரவிராஜா, உடன்குடி பேரூராட்சி நிலைக்குழு உறுப்பினர் ஜான்பாஸ்கர், இளைஞர் அணியை சேர்ந்த பாய்ஸ், அஜய், செட்டியாபத்து ஜாம்புராஜ், பேரூராட்சி முன்னாள் உ றுப்பினர் முகமது சலீம், தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×