search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mercantile Bank"

    • பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது.
    • தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருகிறது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஒரு தலை சிறந்த ஷெட்யூல்டு கமர்சியல் வங்கி. பங்கு சந்தைகளில் தனது பங்கி னை பட்டியலிட்டதை அடுத்து தனது தொலை நோக்கு பார்வையாக மீண்டும் இந்தியா முழுவது மான விரிவாக்க நடவடிக் கைகளில் ஈடுபட்டு வருகிறது.

    புதிய கிளைகள் திறப்பு

    வங்கியானது 537 மற்றும் 538-வது கிளைகளை ஆந்திர பிரதேசம் ஸ்ரீசத்யசாய் மாவட்டம் தர்மாவரம், தமிழ்நாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஆகிய இடங்களில் ஏ.டி.எம், சி.ஆர்.எம் வசதியுடன் வங்கியின் கிளைகளை நேற்று தொடங்கியது. தர்மாவரத்தில் 537-வது கிளையை ஜவுளி அமைச்சக மத்திய பட்டு வாரியத்தை சேர்ந்த பிரகாஷ் பட் திறந்து வைத்தார்.

    உளுந்தூர்பேட்டையில் 538-வது கிளையை உளுந்தூர்பேட்டை வியா பாரிகள் சங்க தலைவர் முகமது கனி திறந்து வைத்தார். விழாவில் வங்கி யின் ஊழியர்கள், அலு வலர்கள், வாடிக்கை யாளர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். விழாவில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் பேசியதாவது:-

    50 லட்சம் வாடிக்கையாளர்கள்

    பங்குச் சந்தைகளில் பட்டியலிட்ட பிறகு வங்கியானது அதனை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் வேகம் காட்டும் விதமாக தனது செயல்பாடுகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக 537 மற்றும் 538-வது புதிய கிளைகளை ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ் நாட்டில் தொடங்கி உள்ளது. மேலும் இன்னும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறந்திட திட்டமிட்டிருக்கிறது.

    தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு பெயர்பெற்ற பழைய தனியார் துறை வங்கியாகும். தூத்துக்குடியை தலைமை அலுவலகம் கொண்ட இந்த வங்கி 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளர் சேவையிலும் அதன் கோட்பாடுகள் மற்றும் வரை முறைகளிலும் போற்றுதலுக்குரிய சரித்திரம் படைத்து வருவ தோடு, தொடர்ந்து லாபம் ஈட்டியும் வருகிறது. இந்த வங்கியானது, இந்தியா முழுவதிலும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 538 கிளைகள் மற்றும் 12 மண்டல அலு வகங்களை கொண்டு சுமார் 50 லட்சத்துக்கும் மேலான வாடிக்கை யாளர்களுக்கு நிறைவான சேவை ஆற்றி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2023-2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 9.40 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.84,300 கோடியை எட்டி உள்ளது.
    • நிதி பரி வர்த்தனை அறிக்கைக்கும், வங்கி நிதிநிலை அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடை யாது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குனர் குழு கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. இதில் 2023-2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியு மான எஸ்.கிருஷ்ணன் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ரூ.261.23 கோடி

    நிகர லாபம்

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 536 கிளைகளுடன் செயல் பட்டு வருகிறது. 2023-2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 9.40 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.84,300 கோடியை எட்டி உள்ளது. வைப்புத்தொகை ரூ.47,008 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன் களின் மொத்த தொகை ரூ.37,292 கோடி என்ற நிலையில் உள்ளது.

    வங்கியின் நிகர மதிப்பு ரூ.7,190 கோடியாக உயர்ந்து உள்ளது. முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் இது ரூ.5,427 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர லாபம் ரூ.261.23 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இதே முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.234.21 கோடியாக இருந்தது. நிகர லாபம் 11.54 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது.

    வராக்கடன் குறைவு

    கடன்களின் மூலம் வட்டி வருவாய் ரூ.1,002 கோடியில் இருந்து ரூ.1,156 கோடி யாகவும், இதர வருவாய் ரூ.140 கோடியில் இருந்து ரூ.167 கோடியாகவும் உயர்ந்து உள்ளது. மொத்த வராக்கடன் 1.69 சதவீதத்தில் இருந்து 1.56 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 0.93 சதவீதத்தில் இருந்து 0.66 சதவீதமாகவும் குறைந்து உள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.381-ல் இருந்து ரூ.454 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி முன்னுரிமை துறைகளுக்கு ரூ.27,805 கோடி கடன் வழங்கி உள்ளது. விவசாய துறைக்கு ரூ.12,231 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.13,311 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    சரிபார்ப்பு பணிகள்

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமான வரித்துறையினர் சில கணக்குள் தொடர்பாக சரிபார்ப்பு பணிகளை மட்டுமே செய்தனர். நிதி பரி வர்த்தனை அறிக்கைக்கும், வங்கி நிதிநிலை அறிக்கைக் கும் எந்த சம்பந்தமும் கிடை யாது. நிதி பரிவர்த்தனை அறிக்கையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குரிய தகவல்கள் இருக்கும். அந்த அறிக்கையில் வாடிக்கை யாளர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்தால், அதனை தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. வருமான வரித் துறையினர் சுட்டிக்காட்டிய அனைத்து குறைகளையும் சரி செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கியின் தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன், பொதுமேலாளர்கள் சூரியராஜ், இன்பமணி, ரமேஷ், நாராயணன், ஜெயராமன், துணை பொதுமேலாளர் அசோக்குமார், தலைமை மேலாளர் ராஜா மற்றும் வங்கியின் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • இந்த ஆண்டு சிறிய வங்கி பிரிவில் சிறந்த 2-வது வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
    • விருது பெற்ற மகிழ்ச்சியை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்கிறோம் என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூறினார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு 2-வது சிறந்த வங்கிக்கான ஆசிய விருது வழங்கப்பட்டது.

    சிறந்த ஆசிய வங்கி

    கொல்கத்தா இந்திய வர்த்தக தொழிற்சங்கம், வங்கிகளின் திறமையான செயல்பாடுகளின் அடிப்படையில், தலைசிறந்த நடுவர்களை கொண்டு சிறந்த வங்கியை தேர்வு செய்து, வளர்ந்து வரும் ஆசிய வங்கி விருதுகளை வழங்கி வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு சிறிய வங்கி பிரிவில் சிறந்த 2-வது வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த வங்கியின் இடர்மேலாண்மை, லாபம் ஈட்டுதல், கடன் வழங்கியதன் தரம் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    விருது

    இந்த விருது வழங்கும் விழா, கோவாவில் நடந்தது. விழாவில் இந்திய வர்த்தக தொழிற்சங்க ஏற்றுமதி கமிட்டியைச் சேர்ந்த அட்லானு சென் தலைமை தாங்கி, வளர்ந்து வரும் ஆசிய வங்கி விருதை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் பொதுமேலாளர் (செயல்பாடுகள் மற்றும் சேவைகள் துறை) சூரியராஜிடம் வழங்கினார்.

    இதுகுறித்து வங்கியின் நிர்வாக இயக்குனர் எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ''விருது பெற்ற மகிழ்ச்சியை வங்கியின் அனைத்து உடைமைதாரர்களுக்கும் பகிர்கிறோம். விருதுகள், எங்களது வங்கியில் உள்ள அனைவரையும் இன்னும் சிறப்பாக செயல்பட்டு மேலும் வளர்ச்சி அடையவும் ஊக்கம் அளிக்கிறது'' என்று கூறினார்.

    • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.
    • தற்போதைய 2023-24-ம் நிதி ஆண்டில் மேலும் புதிதாக 50 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம் என்று நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு கடந்த 1921-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வங்கி லாபத்தை ஈட்டி வருகிறது.

    தற்போது 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்கள் மூலம் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

    இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு மற்றும் மார்ச் 31-ந் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டின் நிதிநிலை அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-

    கடந்த 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக லாபம் ஈட்டிவரும் இவ்வங்கியானது 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

    கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் முன் எப்போதையும் விட வங்கியானது அதிகப்பட்சமாக ரூ. 1,029 கோடி லாபம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதேபோல் லாபமாக ரூ. 1,573 கோடியும், நிகர வட்டி வருமானமாக 2,094 கோடியும் ஈட்டியுள்ளது.

    கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ. 44.933 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வைப்பு நிதி தற்போது ரூ. 47,766 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த கடன் தொகை ரூ. 37,582 கோடியா உயர்ந்துள்ளது. இதனால் 11.36 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி ரூ. 1,516 கோடியாக இருந்த செயல்பாட்டு லாபம் இந்த ஆண்டு ரூ. 1573 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 822 கோடியாக இருந்த வங்கியின் நிகர லாபமும் ரூ. 1029 கோடியாக உயர்ந்து 25.18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    நிகர வட்டி வருமானமும் 15.37 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ. 2,094 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த அண்டு மார்ச் 31-ந் தேதி ரூ. 1815 கோடியாக இருந்தது.

    2022-23-ம் ஆண்டு நிதியாண்டில் புதிதாக 21 கிளைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போதைய 2023-24-ம் நிதி ஆண்டில் மேலும் புதிதாக 50 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

    பங்குதாரர்களுக்கு 100 சதவீத ஈவு தொகை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதில் 50 சதவீதம் இடைக்கால ஈவு தொகையாக கடந்த மார்ச் மாதமே வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த வணிக வங்கி ஆகும்.
    • ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த வணிக வங்கி ஆகும். பிசினஸ் டுடே- கே.பி.எம்.ஜி. சார்பில் ஆண்டுதோறும் வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து, 37 தரக்கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில் விருது வழங்கி வருகிறது.

    சிறந்த வங்கி விருது

    இந்த நிலையில் ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா, மும்பையில் நடந்தது.

    விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணனிடம் விருதினை வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி பகவத் கிஷன்ராவ் கரட், பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ''விருது பெற்ற இந்த சிறப்பான தருணத்தில் இந்த விருதினை வங்கியின் அனைத்து உடமை தாரர்களுக்கும் உரித்தாக்குகிறேன். விருது பெற்ற மகிழ்ச்சியோடு, நாங்கள் இன்னும் இரட்டிப்பு முயற்சியோடு பணியாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு இந்த விருதினை தொடர்ந்து பெற வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது'' என்று கூறினார்.

    ×