search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "central minister Nitin Gadkari"

    • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த வணிக வங்கி ஆகும்.
    • ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி லிமிடெட் ஒரு தலைசிறந்த வணிக வங்கி ஆகும். பிசினஸ் டுடே- கே.பி.எம்.ஜி. சார்பில் ஆண்டுதோறும் வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து, 37 தரக்கட்டுப்பாட்டு விதிகளின் அடிப்படையில் விருது வழங்கி வருகிறது.

    சிறந்த வங்கி விருது

    இந்த நிலையில் ரூ.1 லட்சம் கோடி வர்த்தக வரம்புக்குள் உள்ள வங்கிகளின் பிரிவில் சிறந்த வங்கியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா, மும்பையில் நடந்தது.

    விழாவில் மத்திய மந்திரி நிதின் கட்காரி, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான எஸ்.கிருஷ்ணனிடம் விருதினை வழங்கினார். விழாவில் மத்திய மந்திரி பகவத் கிஷன்ராவ் கரட், பாரத ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதுகுறித்து வங்கியின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக இயக்குனருமான எஸ்.கிருஷ்ணன் கூறுகையில், ''விருது பெற்ற இந்த சிறப்பான தருணத்தில் இந்த விருதினை வங்கியின் அனைத்து உடமை தாரர்களுக்கும் உரித்தாக்குகிறேன். விருது பெற்ற மகிழ்ச்சியோடு, நாங்கள் இன்னும் இரட்டிப்பு முயற்சியோடு பணியாற்றி வாடிக்கையாளர்களின் நன்மதிப்போடு இந்த விருதினை தொடர்ந்து பெற வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது'' என்று கூறினார்.

    நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்ய முடியாது என மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    மும்பையில் நேற்று நடைபெற்ற பிரபல செய்தி நிறுவனத்தின் தொழிற்சங்க நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பங்கேற்று பேசினார்.

    கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் நடைபெற்ற 4.60 லட்சம் சாலை விபத்துகளில் 1.46 லட்சம் பேர் பலியாகியுள்ளதாக குறிப்பிட்ட கட்காரி, நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் பயணம் பாதுகாப்பாக அமைய வேண்டியதை உறுதிப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார்.

    அதே வேளையில் நெடுஞ்சாலை விவகாரத்தில் நல்ல தரமான சேவைகள் தொடர வேண்டுமென்றால், சுங்க வரிகளை செலுத்தியே தீர வேண்டும். நெடுஞ்சாலை சுங்க வரியை ரத்து செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். #Gadkari #highwaytoll
    ×