search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Managing Director S. Krishnan"

    • 2023-2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 9.40 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.84,300 கோடியை எட்டி உள்ளது.
    • நிதி பரி வர்த்தனை அறிக்கைக்கும், வங்கி நிதிநிலை அறிக்கைக்கும் எந்த சம்பந்தமும் கிடை யாது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியை தலைமை யிடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குனர் குழு கூட்டம் நேற்று தூத்துக்குடியில் நடந்தது. இதில் 2023-2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியு மான எஸ்.கிருஷ்ணன் முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ரூ.261.23 கோடி

    நிகர லாபம்

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 536 கிளைகளுடன் செயல் பட்டு வருகிறது. 2023-2024-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 9.40 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.84,300 கோடியை எட்டி உள்ளது. வைப்புத்தொகை ரூ.47,008 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. கடன் களின் மொத்த தொகை ரூ.37,292 கோடி என்ற நிலையில் உள்ளது.

    வங்கியின் நிகர மதிப்பு ரூ.7,190 கோடியாக உயர்ந்து உள்ளது. முந்தைய ஆண்டின் முதல் காலாண்டில் இது ரூ.5,427 கோடியாக இருந்தது. வங்கியின் நிகர லாபம் ரூ.261.23 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டில் இதே முதல் காலாண்டில் நிகர லாபம் ரூ.234.21 கோடியாக இருந்தது. நிகர லாபம் 11.54 சதவீதம் வளர்ச்சியடைந்து உள்ளது.

    வராக்கடன் குறைவு

    கடன்களின் மூலம் வட்டி வருவாய் ரூ.1,002 கோடியில் இருந்து ரூ.1,156 கோடி யாகவும், இதர வருவாய் ரூ.140 கோடியில் இருந்து ரூ.167 கோடியாகவும் உயர்ந்து உள்ளது. மொத்த வராக்கடன் 1.69 சதவீதத்தில் இருந்து 1.56 சதவீதமாகவும், நிகர வராக்கடன் 0.93 சதவீதத்தில் இருந்து 0.66 சதவீதமாகவும் குறைந்து உள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.381-ல் இருந்து ரூ.454 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கி முன்னுரிமை துறைகளுக்கு ரூ.27,805 கோடி கடன் வழங்கி உள்ளது. விவசாய துறைக்கு ரூ.12,231 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. குறு, சிறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.13,311 கோடி கடன் வழங்கப்பட்டு உள்ளது.

    சரிபார்ப்பு பணிகள்

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வருமான வரித்துறையினர் சில கணக்குள் தொடர்பாக சரிபார்ப்பு பணிகளை மட்டுமே செய்தனர். நிதி பரி வர்த்தனை அறிக்கைக்கும், வங்கி நிதிநிலை அறிக்கைக் கும் எந்த சம்பந்தமும் கிடை யாது. நிதி பரிவர்த்தனை அறிக்கையில் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குரிய தகவல்கள் இருக்கும். அந்த அறிக்கையில் வாடிக்கை யாளர் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்தால், அதனை தெரிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. வருமான வரித் துறையினர் சுட்டிக்காட்டிய அனைத்து குறைகளையும் சரி செய்து உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வங்கியின் தலைமை நிதி அலுவலர் பி.ஏ.கிருஷ்ணன், பொதுமேலாளர்கள் சூரியராஜ், இன்பமணி, ரமேஷ், நாராயணன், ஜெயராமன், துணை பொதுமேலாளர் அசோக்குமார், தலைமை மேலாளர் ராஜா மற்றும் வங்கியின் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    ×