search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Managing Director Krishnan"

    • தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.
    • தற்போதைய 2023-24-ம் நிதி ஆண்டில் மேலும் புதிதாக 50 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம் என்று நிர்வாக இயக்குநர் கிருஷ்ணன் கூறியுள்ளார்.

    தூத்துக்குடி:

    தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு கடந்த 1921-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வங்கி லாபத்தை ஈட்டி வருகிறது.

    தற்போது 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்கள் மூலம் சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

    இந்நிலையில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்ட காலாண்டு மற்றும் மார்ச் 31-ந் தேதியுடன் முடிந்த நிதி ஆண்டின் நிதிநிலை அறிக்கை அங்கீகரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-

    கடந்த 1921-ம் ஆண்டு தொடங்கப்பட்டு கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக லாபம் ஈட்டிவரும் இவ்வங்கியானது 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.

    கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில் முன் எப்போதையும் விட வங்கியானது அதிகப்பட்சமாக ரூ. 1,029 கோடி லாபம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இதேபோல் லாபமாக ரூ. 1,573 கோடியும், நிகர வட்டி வருமானமாக 2,094 கோடியும் ஈட்டியுள்ளது.

    கடந்த ஆண்டில் இதே காலத்தில் ரூ. 44.933 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வைப்பு நிதி தற்போது ரூ. 47,766 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் மொத்த கடன் தொகை ரூ. 37,582 கோடியா உயர்ந்துள்ளது. இதனால் 11.36 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி ரூ. 1,516 கோடியாக இருந்த செயல்பாட்டு லாபம் இந்த ஆண்டு ரூ. 1573 கோடியாக உயர்ந்துள்ளது.

    கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ. 822 கோடியாக இருந்த வங்கியின் நிகர லாபமும் ரூ. 1029 கோடியாக உயர்ந்து 25.18 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

    நிகர வட்டி வருமானமும் 15.37 சதவீத வளர்ச்சி அடைந்து ரூ. 2,094 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த அண்டு மார்ச் 31-ந் தேதி ரூ. 1815 கோடியாக இருந்தது.

    2022-23-ம் ஆண்டு நிதியாண்டில் புதிதாக 21 கிளைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போதைய 2023-24-ம் நிதி ஆண்டில் மேலும் புதிதாக 50 கிளைகளை திறக்க திட்டமிட்டுள்ளோம்.

    பங்குதாரர்களுக்கு 100 சதவீத ஈவு தொகை வழங்க இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது. இதில் 50 சதவீதம் இடைக்கால ஈவு தொகையாக கடந்த மார்ச் மாதமே வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் தலைமை நிதி அதிகாரி, பொதுமேலாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×