என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahalaya Patcham"

    • ஒரு வேளை நீங்கள் இந்த 14 நாள் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள்.
    • நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள்.

    இன்று மகாளய பட்ச அமாவாசைக்கான 14 நாள் தொடங்குகிறது. இந்த அமாவாசை தினத்துக்கு முன்பு வரும் 14 நாட்களும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிறப்பு வாய்ந்தது. ஆற்றல்கள் மிகுந்தது.

    நம்மில் பெரும்பாலானவர்கள் ஆடி அமாவாசையையும், தை அமாவாசையையும் மட்டும்தான் சிறப்பான அமாவாசை நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசையை விட பலமடங்கு உயர்வானது மகாளய பட்ச அமாவாசை.

    ஆடி, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்தால், நீங்கள் யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே சென்றடையும். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று நீங்கள் கொடுக்கும் திதி அல்லது தர்ப்பணம் மறைந்த முன்னோர்களான உங்கள் மூதாதையர்கள் அனைவருக்கும் போய் சேரும்.

    மகாளய பட்சமான 14 நாட்கள் அல்லது மகாளய அமாவாசை நாளில் யார் ஒருவர் பித்ருக்களான நமது மறைந்த முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வழங்கும் தர்ப்பணத்தை கொடுக்கிறாரோ, அந்த எள்ளும், தண்ணீரும் அவரது முந்தைய 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும். இந்த ஒரு காரணத்தினால்தான் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசை உயர்வானதாக, சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மகாளயத்தை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் அடுத்த 14 நாட்களும் ஒவ்வொருவரும் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு எள்-தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    இந்த 14 நாட்களில் கொடுக்கும் எள்-தண்ணீர் தர்ப்பணத்துக்கு ஒவ்வொரு நாள் வரும் திதிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். மகாளய பட்சத்தின் 14 நாட்கள் சிறப்பை உணர்ந்தவர்கள் இந்த 14 நாட்களை நிச்சயம் தவறவிட மாட்டார்கள்.

    இது மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை ஆகும்.

    மகாளயபட்ச நாட்களில் மட்டுமே பித்ரு லோகத்தில் இருந்து விஷ்ணு அனுமதியுடன் பித்ருக்கள் உங்களைத்தேடி வருவார்கள். அந்த சமயத்தில் நீங்கள் அவர்களை நினைத்து தர்ப்பணம், தானம் போன்றவற்றை செய்தால் உங்கள் குடும்ப பித்ருக்கள் மனம் மகிழ்வார்கள்.

    நமது வாரிசுகள் நம்மை மறக்கவில்லை. நம்மை நினைத்து வழிபட்டு ஆராதனை செய்கிறார்கள் என்று மனம் முழுக்க மகிழ்ச்சியால் பூரித்துப் போவார்கள்.

    அந்த மகிழ்ச்சி காரணமாக நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது உங்களுக்கு எளிதில் கிடைக்க உதவி செய்வார்கள். உங்கள் வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி வகை செய்வார்கள். நீங்கள் கேட்காதவைகளை கூட பித்ருக்கள் தந்து விட்டு செல்வார்கள்.

    மகாளய பட்ச வழிபாடு தரும் மிகப்பெரிய பலன் இது. எனவே இன்று மறக்காமல் உங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தொடங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள், ஆடை, குடை தானம் செய்யலாம்.

    ஒரு வேளை நீங்கள் இந்த 14 நாள் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள். நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள். பசியோடும், தாகத்தோடும் இருக்கும் நம்மை மறந்து விட்டார்களே என்று மனதில் கவலை கொள்வார்கள்.

    அந்த கவலையும், வேதனையும் தான் அவர்களது வாரிசுகளுக்கு தோஷங்களாக மாறி விடும். இதைத்தான் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் என்று சொல்வார்கள்.

    இத்தகைய தோஷத்தையும், பாவத்தையும் நீங்களும் உங்கள் வாரிசுகளும் ஏன் சுமக்க வேண்டும்? பித்ருக்களின் பசி, தாகத்தை தீர்க்கும் எள், தண்ணீர் தர்ப்பணத்தை செய்தாலே போதும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.

    தற்போதைய கலிகாலம் காரணமாகவோ, என்னவோ பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலனவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

    பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.

    அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலைப் போட்டு கும்பிட்டு விட்டு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் வம்ச வழியாக தொடரப்படாமல் போய்விடுவதுண்டு.

    அப்படிப்பட்ட அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிட்டது.

    ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படி விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்காவிட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை.

    உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

    உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.



    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள் தான். நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.

    நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா? அவர்களை பார்க்க வைத்து விட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிடலாமா?

    அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

    அவர்கள் மீண்டும் நம் வீட்டில் இருந்து, 14 நாள் மகாளய அமாவாசை தினம் முடிந்த பிறகு பித்ருலோகத்துக்கு புறப்பட்டு போகும் போது, பசியும் பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள். இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக் கூடாது.

    அதற்கு நாம் மகாளய பட்ச 14 நாட்களும் மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய வகையில் அவர்கள் தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். 

    • இதைத்தொடர்ந்து வரும் அமாவாசை முடிய 15 நாட்கள் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய காலங்களாகும்.
    • அச்சமயங்களில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதீகம்.

    மகாளய பட்சம் என்பது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை முடிந்த பவுர்ணமிக்கு அடுத்த நாளான பாத்ரபத பகுளத்தில் தொடங்கும்.

    இதைத்தொடர்ந்து வரும் அமாவாசை முடிய 15 நாட்கள் பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டிய காலங்களாகும்.

    மகாளய பட்சமான பிரதமை தொடங்கி 15 நாட்களில் ஒரு முறையும், மேலும் வழக்கப்படி மகாளய அமாவாசையன்றும் ஒருமுறையான இருமுறை தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மகாளய பட்சத்தில் மகாபரணி, மத்யாஷ்டமி, வியதீபாதம், வைதிருதி, ஷடசீதி ஆகிய நாட்களில் விசேஷமாக தர்ப்பணம் விடலாம்.

    இந்நாட்களில் விட முடியாதவர்கள் மற்ற ஏதாவதொரு நாட்களில் மகாளய பட்சத்திற்குள் ஒருமுறை அவசியம் தர்ப்பணம் செய்ய வேண்டும்.

    அச்சமயங்களில் நமது முன்னோர்கள் நாம் செலுத்தும் தர்ப்பணத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பது ஐதீகம்.

    மகாளய பட்ச தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெருமாளை வழிபடுவதற்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது.
    • பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை 15 நாட்களும் மகாளய பட்சம்.

    எல்லா நாட்களிலும் நாம் இறைவனை வழிபடுவோம் என்றாலும், இறைவனை வழிபடுவதற்காகவே நம் முன்னோர்கள், சில மாதங்களை வரையறை செய்து வைத்துள்ளனர். அதில் ஆடி, புரட்டாசி, மார்கழி ஆகியவை அடங்கும். இதில் பெருமாளை வழிபடுவதற்குரிய மாதமாக புரட்டாசி இருக்கிறது.

    பெருமாள் மட்டுமின்றி, அம்பாளுக்குரிய நவராத்திரி விரத நாட்களும், புரட்டாசி மாதம் தான் வருகிறது. அதோடு முன்னோர்களை வழிபடும் 'மகாளய அமாவாசை', சிவபெருமானின் அருளை பெற்றுத் தரும் 'கேதார கவுரி விரதம்' என்று அனைத்து தெய்வங்களுக்குமான வழிபாட்டு மாதமாக இந்த புரட்டாசி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் சில விரதங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.


    விநாயகர் விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. விநாயகரை மனதில் நிறுத்தி செய்யப்படும் இந்த விரதத்தை, மன சுத்தத்தோடு செய்தால், நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். இது தவிர 'துர்வாஷ்டமி விரதம் என்பதும் விநாயகரை வழிபடும் ஒரு விரதமாக இருக்கிறது.

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி திதி அன்று, சிவபெருமானோடு சேர்த்து விநாயகரை வழிபட வேண்டிய விரதம் இது. இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

    மகாலட்சுமி விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமி தேவியைப் பிரார்த்தித்து செய்யப்படும் விரதம் இதுவாகும். தொடர்ச்சியாக 16 நாட்கள் மகாலட்சுமியை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் இருக்கும் வறுமை அகலும். ஒளிமயமான வாழ்க்கை அமையும்.


    அமுக்தாபரண விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சப்தமியில், உமாமகேஸ்வரரை பூஜை செய்து 12 முடிச்சுகள் கொண்ட கயிற்றை (சரடு) வலக்கையில் கட்டிக் கொள்வார்கள். இந்த விரதத்தால் பிள்ளைப் பேறு கிடைக்கும்.

    ஜேஷ்டா விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி அன்று ஜேஷ்டா தேவியை நினைத்து செய்யப்படும் விரதம் இது. மகாலட்சுமிக்கு மூத்த தேவியான இவரை, பேச்சு வழக்கில் 'மூதேவி' என்றும் அழைப்பார்கள்.


    சஷ்டி-லலிதா விரதம்

    புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை குறித்து கடை பிடிக்கப்படும் விரதம் இது. இந்த விரதத்தை அனுஷ்டித்தால் சர்வ மங்கலமும் கிடைக்கப்பெறும்.

    கபிலா சஷ்டி விரதம்

    புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சூரியனை பூஜை செய்து பழுப்பு வண்ணம் கொண்ட பசு மாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பூஜிக்கும் விரதமாகும். இதை மேற்கொள்வதால் சகல சித்திகளும் கிடைக்கும்.


    மகாளய பட்சம்

    புரட்டாசி பவுர்ணமியைத் தொடர்ந்து வரும் தேய்பிறை பதினைந்து நாட்களும் மகாளய பட்சம் ஆகும். இந்த காலத்தில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பது புண்ணியம். இதுநாள் வரை முன்னோர்களுக்கு திதி கொடுக்காதவர்கள் கூட, இந்த மகாளய அமாவாசையில் திதி கொடுத்தால், முழு பலனையும் பெற முடியும்.

    ×