search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madathikulam"

    • துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார்.
    • 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் வட்டாரம் துங்காவி மற்றும் மெட்ராத்தி ஊராட் சிகளில் கலெக்டர் வினீத் ஆய்வு மேற்கொண்டார். கடந்த 2021- 2022-ம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட துங்காவி கிராமத்தில் வேளா ண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளில் செயல்படு த்தப்பட்ட திட்டங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    துங்காவியில் 200 பண்ணைக் குடும்பங்களுக்கு தலா 3 தென் னங்கன்றுகள், 5 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான்கள், 22 சிறு,குறு விவசாயிகளுக்கு பண்ணைக்கருவிகள், 33 எண்ணிக் கையில் தார்ப்பாய்கள், 5 தெளிப்பான்கள், மின்கலத்தெளிப்பான் கள் ஆகியவை வழங்கப்ப ட்டுள்ளது. மேலும் 50 ஏக்கர் பரப்பளவில் வரப்புப் பயிரில் உளுந்து சாகுபடி செய்வதற்கும், பசுமைப்போர்வை திட்டத்தின் கீழ் 8ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்வதற்கும், தென்னையில் கருந்தலைப்புழு மற்றும் வெள்ளை ஈயைக்கட்டு ப்பாட்டுக்கு ஏற்ற ஒட்டுண்ணிகள், கரும்பு ஒட்டுண்ணி, உயிர் உரங்கள், உளுந்து மற்றும் பிற விதைகள் வினியோகம் என மொத்தம் 420 விவசாய குடும்பங்களுக்கு வேளாண் துறை மூலம் மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் வினீத் பயனாளிகள் விவர ங்களைக்கே ட்டறிந்தார். அத்துடன் விவசாயிகளின் திட்டங்கள், எந்திரங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது வேளாண் துணை இயக்குனர் சுருளியப்பன், மாவட்ட கலெக்டரின் (வேளாண்துறை) நேரடி உதவியாளர் மகாதேவன், மடத்துக்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம்
    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.

    மடத்துக்குளம் :

    உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப்பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 18-ந்தேதி( வியாழக்கிழமை ) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின்வாரிய செயற் பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    உடுமலை பகுதியில் (காலை 9 மணி முதல் பகல் 2 மணி) மின்தடை ஏற்படும் பகுதிகள்: போடிபட்டி, அண்ணா நகா், பள்ளபாளையம், கொங்கலக் குறிச்சி, குறிச்சிக்கோட்டை, சுண்டக்காம்பாளையம், இராகல்பாவி, கணபதிபாளையம், வெனசுப்பட்டி, தொட்டப்பட்டி, ஜீவா நகா், அரசு கலைக் கல்லூரி, ராமசாமி நகா், யுகேசி நகா், தீயணைப்பு நிலையம் பகுதி. மடத்துக்குளம் பகுதியில் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், பாப்பான்குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையாா்பாளையம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, கடத்தூா், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூா், கருப்புசாமிபுதூா், அ.க.புத்தூா், எஸ்.ஜி.புதூா், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூா், மடத்தூா், மயிலாபுரம் நல்லண்ணகவுண்டன்புதூா், குளத்துப்பாளைய நல்லூா்.

    பல்லடம் மின் கோட்டம் காளிவேலம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளா் ஜி.ரத்தினகுமாா் தெரிவித்துள்ளாா். மின் தடை ஏற்படும் பகுதிகள்: செம்மிபாளையம், சுக்கம்பாளையம், காளிவேலம்பட்டி, அண்ணா நகா், ஊஞ்சபாளையம், ராசாகவுண்டம்பாளையம், லட்சுமி மில்ஸ், சாமிகவுண்டன்பாளையம், பெரும்பாளி, மின் நகா், சின்னியம்பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி.

    ×