search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lesbian couple"

    • வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.
    • அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர்கள் சுமையா செரின், அபீபா. பள்ளி தோழிகளான இவர்களுக்கு இடையே பிளஸ்-2 படிக்கும் போது காதல் மலர்ந்துள்ளது. பெரியவர்களாக ஆன பிறகும் அது நீடித்துள்ளது.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனியாக வாழ்வதற்காக இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இது குறித்து அவர்களது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். அந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்டு இருவரையும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.

    இதையடுத்து அவர்கள் இருவரும் எர்ணாகுளத்திற்கு சென்று லெஸ்பியன் ஜோடியாக வாழ்ந்து வந்தனர். உறவினர்கள் மற்றும் குடும்பத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வாழ்ந்து வந்த இருவரும் கொளஞ்சேரியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

    அங்கேயே வாடகைக்கு வீடு எடுத்து ரகசியமாக தங்கி இருந்தனர். இது அபீபாவின் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் அவர்கள் அங்குச் சென்று அபீபாவை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அபீபாவை கண்டு பிடித்து தருமாறு கேரள ஐகோர்ட்டில் சுமையா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது அபீபாவை அவரது பெற்றோர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுமையா மனுவில் கூறப்பட்டிருந்த விஷயங்கள் குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தினர்.

    அப்போது அபீபா, சுமையாவுடன் உறவில் இருந்த போதிலும் பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கூறினார். இதையடுத்து சுமையாவின் ஆட்கொணர்வு மனுவை ஐகோர்ட் பெஞ்ச் முடித்து வைத்தது. மேலும் லெஸ்பியன் ஜோடிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    • காதலிக்கும் போது பாலினம் பார்ப்பது கிடையாது. சரியான நபர் தான் முக்கியம்.
    • அன்பு அனைவரையும் வெல்லும். அன்பு இருக்கும் இடத்தில் பாகுபாடு இருக்க முடியாது.

    கொல்கத்தாவை சேர்ந்த மவுசுமி தத்தா மற்றும் மவுமிதா மஜூம்டர் ஆகிய லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    கடந்த திங்கட்கிழமை கொல்கத்தாவில் ஜோவா பஜாரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பாரம்பரிய பெங்காலி சடங்குகளுடன் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

    இதுகுறித்து மவுசுமி தத்தா கூறுகையில், காதலிக்கும் போது பாலினம் பார்ப்பது கிடையாது. சரியான நபர் தான் முக்கியம். அன்பு அனைவரையும் வெல்லும். அன்பு இருக்கும் இடத்தில் பாகுபாடு இருக்க முடியாது. இது சமூகத்தை பற்றியது அல்ல, அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள், யாருடன் தங்கள் வாழ்க்கையை செலவிட விரும்புகிறார்கள் என்பதை பற்றித்தான். மேலும் தங்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

    • லெஸ்பியன் ஜோடியான இவர்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
    • கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2 பேரும் சென்னையில் சேர்ந்து வசித்து வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவைச் சேர்ந்தவர் ஆதிலா. இவர் தனது தோழி பாத்திமா நூராவுடன் இணைந்து வாழ விரும்பினார். லெஸ்பியன் ஜோடியான இவர்களுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

    குறிப்பாக பாத்திமா நூராவின் குடும்பத்தினர் அவரை ஆதிலாவிடம் இருந்து பிரித்து மறைத்தனர். இது தொடர்பாக ஆதிலா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் பாத்திமா நூராவை கண்டுபிடித்து தரும்படி கோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுவும் தாக்கல் செய்தார்.

    அதன்படி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பாத்திமா, ஆதிலாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்தார். இதற்கு கோர்ட்டு அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2 பேரும் சென்னையில் சேர்ந்து வசித்து வருகின்றனர்.


    இந்த நிலையில் ஆதிலா-பாத்திமா நூரா ஜோடி, பாரம்பரிய திருமண உடைகளை அணிந்துகொண்டு, பின்னணியில் கடலைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் மோதிரங்களை மாற்றிக் கொண்டது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதன் மூலம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட தாகவும், அதற்கு முந்தைய நிச்சயதார்த்த போட்டோ ஷூட் தான் இது எனக் கருதி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இருவரும் தாங்கள் நிச்சயதார்த்தமோ, திருமணமோ செய்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். இது போட்டோஷூட்டின் ஒரு பகுதி தான் என அவர்கள் கூறினர். படங்களின் கருப்பொருளைப் பார்த்தால் குழப்பம் புரியும் என்று ஆதிலா தெரிவித்தார்.

    • திருமண பந்தம் ஆண்-பெண்ணுக்கு இடையேதான் என்பது மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
    • இயற்கைக்கு மாறாக ஒரு பாலினத்தினர் திருமணம் செய்துகொள்வது என்பது ஏதோ சமூகத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும், ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோர் முன்வருவது இல்லை.

    சென்னை:

    பொதுவாக திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நமது முன்னோர்கள் சொல்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் சில திருமணங்கள் சமூக ஊடகங்களின் மூலம் மலரும் நட்பின் வாயிலாகவே நிச்சயிக்கப்படுகிறது. அதிலும், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்களே அதாவது ஆண், ஆணையும், பெண், பெண்ணையும் தங்கள் வாழ்க்கை துணையாக கரம் கோர்த்து திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் வினோத சம்பவங்களும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கின்றன.

    அந்த வகையில் ஒரே பாலினத்தை விரும்பும் 'லெஸ்பியன்' ஜோடிகளான தமிழக பிராமண குடும்பத்தை சேர்ந்த சுபிக்‌ஷா சுப்பிரமணி என்ற பெண்ணும், வங்காளதேசத்தை சேர்ந்த டினா தாஸ் என்ற பெண்ணும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். சுபிக்‌ஷா தமிழக பாரம்பரிய முறைப்படி மடிசார் சேலை அணிந்தவாறு தனது தந்தையின் மடியில் அமர, எதிர் முனையில் பைஜாமா அணிந்தவாறு டினா தாஸ் உறவினரின் மடியில் அமர ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர்.

    சுபிக்‌ஷாவின் தந்தை முறைப்படி கன்னிகாதானம் செய்து கொடுத்தார். சம்பிரதாயம் முடிந்ததும் இல்வாழ்க்கையில் சிறகடித்து பறக்கிறது லெஸ்பியன் ஜோடி. கை நிறைய சம்பளம் வாங்கும் ஆடிட்டரான சுபிக்‌ஷாவின் குடும்பம் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையை பூர்வீகமாக கொண்டது. மதுரையில் இருந்து அவருடைய குடும்பம் கத்தார் நாட்டுக்கும், பின்னர் அங்கிருந்து கனடாவில் உள்ள கல்கரி நகருக்கும் இடம் பெயர்ந்தது. சுபிக்‌ஷாவின் தாயார் பூர்ணபுஷ்கலா, கல்கரி நகரில் சிறுவர்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.

    வங்காளதேசத்தின் வடகிழக்கில் உள்ள சிறிய நகரான மூல்விபசாரை பூர்வீகமாக கொண்டவர் டினா தாஸ். இவருடைய சகோதரி, திருமணமாகி கனடாவின் மொண்ட்ரியால் நகரத்தில் வசித்து வந்தார். அவரோடு, கடந்த 2003-ம் ஆண்டு தனது பெற்றோரோடு ஐக்கியமாகினார் டினா தாஸ். சிறு வயதில் இருந்தே டினா தாசுக்கு லெஸ்பியன் உணர்வுகளில் ஈடுபாடு ஏற்பட்டது. இதனை ஒரு நோயாக கருதிய அவரது பெற்றோர், 19 வயதில் ஆண் ஒருவருடன் திருமணம் செய்து வைத்தனர். ஆனால் 4 ஆண்டுகளில் அந்த பந்தம் அறுந்து போனது.

    லெஸ்பியன் உள்பட இரு பாலின உறவுகளில் நாட்டம் கொண்டவராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட சுபிக்‌ஷாவும், லெஸ்பியன் உறவில் ஈடுபடும் நபராக தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட டினா தாசும் சமூக ஊடகங்களின் மூலமாக பரீட்சயமாகி, கல்நகரி நகரில் சந்தித்து தங்களுடைய உறவை வளர்த்து வந்தனர். லெஸ்பியன் உறவுகொள்பவர்கள் கலந்துகொள்ளும் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர். இதனால் டினா தாசுடன் பேசுவதை அவரது சகோதரி நிறுத்திக்கொண்டார். குடும்பம் அவரைவிட்டு, விலகி நின்றது.

    காலமும், விடா முயற்சியும் அனைத்துக்கும் மருந்து போடும் என்பது போல சுபிக்‌ஷாவை அரவணைத்துக்கொண்டது டினா தாஸ் குடும்பம். மறுமுனையில் சுபிக்‌ஷா குடும்பமும் சமஸ்கிருத முறையில் திருமணத்தை நடத்தி, இல்லற வாழ்க்கைக்கு பச்சை கொடி காட்டி இருக்கிறது. சென்னையில் நடந்த வினோத திருமணத்தில் சுபிக்‌ஷா தரப்பில் அவருடைய தந்தையார் சுப்பிரமணி, தாயார் பூர்ணபுஷ்கலா மற்றும் 84 வயதான பாட்டி பத்மாவதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இதுபோன்ற திருமணங்கள் நமது வழக்கப்படி நடப்பது இல்லை என்று பெற்றோர் பல முறை சுட்டிக்காட்டியும், எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால் டினா தாஸ் உடனான உறவை கைவிட விரும்பாத சுபிக்‌ஷா தனது பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்தார். இதுபோன்ற விவகாரங்களில் பெற்றோர்தான் மகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பார்கள். ஆனால் சுபிக்‌ஷா விஷயத்தில் நடந்தது வேறு. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த சுபிக்‌ஷா இறுதியாக டினா தாசை கரம் பிடித்திருக்கிறார்.

    சுபிக்‌ஷா, டினா தாஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தை கனடாவில் பதிவு செய்துள்ளனர். கல்கரி நகருக்கு வினோத ஜோடி சிறகடித்து பறப்பதற்கு முன்பு, தெற்காசியாவுக்கு இன்ப சுற்றுலா செல்ல உள்ளனர்.

    இதுகுறித்து சுபிக்‌ஷா கூறுகையில், "நாங்கள் நினைத்திருந்த கனவு இதுதான். அது நிறைவேறும் என்று ஒருபோதும் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கடந்த 6 வருடங்களாக இருதரப்பினரின் குடும்பத்தினரோடும் ஒற்றுமையாக இருந்து எங்களுடைய மரபுகளின்படி சடங்குகளை முறையாக நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

    சுபிக்‌ஷாவின் தாயார் பூர்ணபுஷ்கலா கூறும்போது, 'முதலாவதாக, இந்த திருமணத்தால் இந்தியாவில் உள்ள எங்களுடைய குடும்பத்தினர் உறவுகளை முறித்துக்கொள்வார்களோ என்ற அச்சம் இருக்கிறது. சுபிக்‌ஷா எப்படி இந்த சமூகத்தில் வாழ்வார். அவள் தாய்மை உணர்வு அடைவாளா? என்பதிலும் பயம் இருக்கிறது' என்றார்.

    சுபிக்‌ஷாவின் பாட்டி பத்மாவதி, 'எங்கள் பிள்ளைகள் மனம் உடைந்து விலகிச் செல்வதை விடவும், எங்கள் பக்கம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்தோம். இருவருக்கும் இடையே சந்தேகம் ஏற்பட்டால், பயத்தை விட்டுவிட்டு அன்பை தேர்ந்தெடுக்கவேண்டும்' என்று கூறினார்.

    திருமண பந்தம் ஆண்-பெண்ணுக்கு இடையேதான் என்பது மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. அதுபோன்ற இயற்கைக்கு மாறாக ஒரு பாலினத்தினர் திருமணம் செய்துகொள்வது என்பது ஏதோ சமூகத்தில் வித்தியாசமாக தெரிந்தாலும், ஏற்றுக்கொள்ள பெரும்பாலானோர் முன்வருவது இல்லை.

    உறவுகள் எதிர்த்ததால், சேர்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வு அதிகரித்தது. அதுதான் எங்களை இந்த எல்லைவரை கொண்டுவந்தது என்று ஆதிரா நஸ்ரின் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த ஆலுவா பகுதியை சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவரது தோழி பாத்திமா நூரா. இருவரது பெற்றோரும் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தனர். இதனால் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் அங்குள்ள பள்ளியில் சேர்ந்து படித்தனர்.

    அப்போது ஏற்பட்ட நட்பு, இவர்களின் கல்லூரி வாழ்க்கையின் போதும் தொடர்ந்தது. இதற்காக இருவரும் தனியாக தங்கி இருந்தபோது இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டு அது லெஸ்பியன் உறவாக மாறியது.

    ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவருக்கும் இடையேயான லெஸ்பியன் உறவு பற்றி தெரிந்துகொண்ட உறவினர்கள், பாத்திமா நூராவை கேரளா அனுப்பி விட்டனர்.

    இதனை அறிந்த ஆதிலா நஸ்ரின், தோழியை தேடி கேரளா வந்தார். இங்கு பாத்திமா நூராவை கண்டுபிடித்தார். பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தனியாக தங்கி இருந்தனர்.

    அவர்கள் தங்கி இருந்த இடத்தை கண்டுபிடித்த பாத்திமா நூராவின் உறவினர்கள், அங்கு சென்று பாத்திமா நூராவை வலுக்கட்டாயமாக தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர்.

    பாத்திமா நூராவை கடத்தி சென்ற உறவினர்கள், அதன்பின்பு அவரை சந்திக்க ஆதிலா நஸ்ரினை அனுமதிக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதிலா நஸ்ரின், தோழியை அவரது உறவினர்கள் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டு தரவேண்டும் எனவும் கோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்.

    அதோடு தங்கள் இருவருக்கும் இடையே லெஸ்பியன் உறவு இருப்பதாகவும், எனவே தாங்கள் சேர்ந்து வாழ கோர்ட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

    மனுவை விசாரித்த கேரள ஐகோர்ட்டு ஆதிலா நஸ்ரின் மற்றும் அவரது தோழி பாத்திமா நூரா இருவரும் சேர்ந்து வாழ அனுமதி வழங்கியது.

    மேலும் அவர்களுக்கு உறவினர்கள் இடையூறு செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டது. கேரள ஐகோர்ட்டு வழங்கிய இந்த பரபரப்பு தீர்ப்பு குறித்து ஆதிரா நஸ்ரின் கூறியதாவது:-

    என்னிடம் இருந்து பாத்திமா நூராவை அவரது உறவினர்கள் கடத்தி சென்றதும், நான் உடைந்து போனேன். அவரை மீட்க பல்வேறு போராட்டங்களை நடத்தினேன். ஆனால் பாத்திமா நூராவின் பெற்றோர், அவரை மனமாற்ற முயற்சி செய்தனர்.

    இதற்கு பாத்திமா நூரா இடம் கொடுக்கவில்லை. அவரும் என்னுடன் சேர்வதில் உறுதியாக இருந்தார். எனவே நான் கோர்ட்டில் மனு செய்தேன். கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது.

    கோர்ட்டு எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தாலும், இந்த சமூகமும், பொதுமக்களும் எங்களுக்கு ஆதரவாக இருந்தனர். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. இத்தனை ஆண்டுகளாக நாங்கள் சேர்ந்திருந்தபோது பெற்றோர் என்ன சொல்வார்கள், இந்த சமூகம் எங்களை ஏற்றுக்கொள்ளுமா? என்ற சந்தேகம் இருந்தது.

    இப்போதுதான் அந்த மன உளைச்சலில் இருந்து வெளியே வந்துள்ளோம். இனி நிம்மதியாக எங்கள் வாழ்க்கையை தொடங்குவோம்.

    ஒன்றாக படித்தபோது, சேர்ந்து சுற்றிய போது ஏற்பட்ட நட்பும், அதனால் உருவான பாசமும் எங்களை இணைத்தது.

    அந்த இணைப்பை தொடர வேண்டும் என்று விரும்பினோம். உறவுகள் எதிர்த்ததால், சேர்ந்து வாழ வேண்டும் என்ற உணர்வு அதிகரித்தது. அதுதான் எங்களை இந்த எல்லைவரை கொண்டுவந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    உயர்நீதிமன்ற தீர்ப்பால் நாங்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என அதிலா-பாத்திமா ஜோடி தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த 22 வயதான அதிலா நஸ்ரினும், 23 வயதான பாத்திமா நூராவும் பள்ளி நாட்களில் இருந்தே உறவு முறையில் பழகி வந்துள்ளனர். 

    அவர்களது நட்பு கல்லூரி காலத்திலும் தொடர்ந்துள்ளது. பட்டப்படிப்பு முடிந்ததும், பிரிய மனமின்றி இருவரும் தம்பதியினர் போல் ஒன்றாக வாழ முடிவு செய்து வீட்டை விட்டு வெளியேறி தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். 

    இது குறித்த அறிந்த இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம்  பாத்திமா அவரது உறவினர்களால் கடத்தப்பட்டுள்ளார். 

    இதை அடுத்து அதிலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.  அதில் தானும் தனது துணைவியார் பாத்திமா நூராவும் குடும்பத்தினரால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார். 

    தன்னுடன் தங்குவதற்காக ஆலுவாவுக்கு வந்த பாத்திமாவை அவரது குடும்பத்தினர் கடத்திச் சென்றதாகவும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    இந்த மனுவை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், பாத்திமா நூராவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதே நேரத்தில் மனுதாரர் ஆதிலா நஸ்ரினும் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து நேற்று நடைபெற்ற விசாரணையின் முடிவில் லெஸ்பியன் ஜோடி ஒன்றாக வாழ்வதற்கு தடையில்லை என்று நீதிபதி வினோத் சந்திரன் உத்தரவிட்டார். மேலும் ஆட்கொணர்வு மனு குறித்த வழக்கையும் அவர் முடித்து வைத்தார்.

    இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிலா, ஓரின சேர்க்கையாளர்கள் சமூகத்திடம் இருந்து தங்களுக்கு ஆதரவு கிடைத்துள்ளதாகவும்,  கேரள உயர் நீதிமன்ற உத்தரவால், நாங்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறோம் என்றும் கூறினார்.

    எனினும்  நாங்கள் முற்றிலும் சுதந்திரமாக இல்லை, எங்கள் குடும்பங்கள் இன்னும் எங்களை அச்சுறுத்தி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    நியூயார்க் நகரில் ஓடும் காரில் 2 பெண்கள் அடிக்கடி முத்தம் கொடுத்து எல்லை மீறி நடந்து கொண்டதால் அந்த ஜோடியை காரில் இருந்து டிரைவர் கீழே இறக்கி விட்டார்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘உபர்’ கால் டாக்ஸியில் டிரைவராக பணிபுரிபவர் அகமத்- இல்- பவுதாரி. இவரது டாக்ஸியில் நேற்று 2 பெண்கள் பயணம் செய்தனர்.

    ஓடும் காரில் 2 பெண்களும் அடிக்கடி முத்தம் கொடுத்து வந்தனர். அதன் பிறகு இருவரும் காரிலேயே அத்து மீறலில் ஈடுபட்டனர்.

    இதனை டிரைவர் கவனித்து எச்சரித்தார். தொடர்ந்து இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டனர். அந்த பெண்கள் லெஸ்பியன் என தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் இருவரையும் காரில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.

    ஒரு பெண்ணின் பெயர் அலெக்ஸ் லோவின் (26) மற்றொரு பெண் எம்மா பிச்ல் (24) இருவரும் 2 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தற்போது மின்கட்டன் நகரில் தங்களது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இவ்வாறு நடந்து கொண்டனர்.

    ஆனால் இருபெண்களும் உபர் டாக்ஸி நிறுவனத்திடம் டிரைவர் மீது புகார் செய்தனர். கால் டாக்ஸி விதியை மீறி தங்களை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியேற்றியதாக கூறினார்கள். இதையடுத்து டிரைவரின் லைசென்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #tamilnews

    ×