கொல்கத்தாவில் திருமணம் செய்து கொண்ட லெஸ்பியன் ஜோடி

காதலிக்கும் போது பாலினம் பார்ப்பது கிடையாது. சரியான நபர் தான் முக்கியம்.அன்பு அனைவரையும் வெல்லும். அன்பு இருக்கும் இடத்தில் பாகுபாடு இருக்க முடியாது.
கொல்கத்தாவில் திருமணம் செய்து கொண்ட லெஸ்பியன் ஜோடி
Published on

கொல்கத்தாவை சேர்ந்த மவுசுமி தத்தா மற்றும் மவுமிதா மஜூம்டர் ஆகிய லெஸ்பியன் ஜோடி திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கடந்த திங்கட்கிழமை கொல்கத்தாவில் ஜோவா பஜாரில் உள்ள ஒரு கோவிலில் வைத்து பாரம்பரிய பெங்காலி சடங்குகளுடன் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து மவுசுமி தத்தா கூறுகையில், காதலிக்கும் போது பாலினம் பார்ப்பது கிடையாது. சரியான நபர் தான் முக்கியம். அன்பு அனைவரையும் வெல்லும். அன்பு இருக்கும் இடத்தில் பாகுபாடு இருக்க முடியாது. இது சமூகத்தை பற்றியது அல்ல, அவர்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பார்கள், யாருடன் தங்கள் வாழ்க்கையை செலவிட விரும்புகிறார்கள் என்பதை பற்றித்தான். மேலும் தங்களுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com