search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kovai selvaraj"

    • காங்கிரசை பொறுத்தவரை கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லை, பதவி போட்டிக்கும் பஞ்சமில்லை.
    • அதே போன்றதொரு சூழ்நிலையில்தான் கோவை செல்வராஜ் காங்கிரசுக்கு குட்பை சொல்லிவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    அரசியலில் பல சுவாரசியங்கள் அடிக்கடி அரங்கேரும். அந்த வகையில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் தி.மு.க.வில் இணைந்ததோடு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருக்கிறார். இரண்டு முறை காங்கிரசில் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.

    காங்கிரசை பொறுத்தவரை கோஷ்டி பூசலுக்கும் பஞ்சமில்லை, பதவி போட்டிக்கும் பஞ்சமில்லை. அதே போன்றதொரு சூழ்நிலையில்தான் கோவை செல்வராஜ் காங்கிரசுக்கு குட்பை சொல்லிவிட்டு அ.தி.மு.க.வில் இணைந்தார்.

    அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணியாக இயங்கத்தொடங்கியதும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று செயல்பட்டு வந்தார். இப்போது தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார். இணைத்தது மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் தமிழகம் சீரழிந்து விட்டதாகவும், அப்போது உடனிருந்த பாவத்துக்காக பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார். இது எப்படி இருக்கு?

    • முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
    • முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.

    கோவை

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் கோவை மாநகர், மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முனுசாமி செய்தியாளர் சந்திப்பில் ஓ.பி.எஸ்.சை தவறாக கொச்சைப்படுத்தி பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.அம்மாவால் விரட்டி அடிக்கப் பட்டவர் முனுசாமி. முனுசாமிக்கு கட்சியில் 2-ம் தலைவராக வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் ஓ.பி.எஸ்.

    ஓ. பன்னீர்செல்வம் அ.தி.மு.க வில் உழைக்கவில்லை என்று சொல்கிறார்.ஆனால் ஜெயலலிதா, ஓபிஎஸ் கட்சிக்கு கிடைத்தது தான் செய்த பாக்கியம் என்றார். விசுவாசம் மிக்க தொண்டன் என்ற பெயரை ஜெயலலிதாவிடம் வாங்கியவர் ஓ. பன்னீர்செல்வம். அவரை பற்றி பேச யாருக்கும் தகுதி யோக்கியதை கிடையாது.

    எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் அவரது ஆட்சியில் நடந்த ஊழல் பட்டியலை வெளியிடுவேன்.

    கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் திருட்டுப்போனதாக புகார் தெரிவித்துள்ளார்கள். ஆனால் கட்சி அலுவலகத்தில் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் இல்லை. கடந்த தேர்தலில் கட்சியின் தோல்விக்கு காரணம் எடப்பாடி பழனிச்சாமி.

    சசிகலா தற்போது கட்சியின் உறுப்பினர். எப்போதும் போல அவர் இருப்பார். மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×