search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamal hasan"

    • மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.
    • 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்பை வரவேற்கிறேன்.

    யார் சொல்கிறார்கள் என்பதைவிட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத்தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன்.

    12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பதிலளித்த பிரதமர் மோடி, எந்தவொரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார்.
    புது டெல்லி:

    நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அரவக்குறிச்சி தொகுதியில் பேசும்போது, சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார்.

    சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்று கமல்ஹாசன் தனது பேச்சில் குறிப்பிட்டார். பள்ளப்பட்டி என்ற ஊரில் வாழும் இஸ்லாமியர்களின் வாக்குகளை குறி வைத்து அவர் இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது.

    இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் கண்டனம் எழுந்தது. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கமல்ஹாசனின் உருவப்பொம்மை எரிக்கப்பட்டது. அவர் மீது போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்து  பயங்கரவாதி  என்ற பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் இந்து தர்மத்தின் ஆழமான நம்பிக்கை. அது எந்த ஒரு தனிநபரையும் காயப்படுத்துவதில்லை. அதுபோல யாரையும் கொலை செய்வதையும் இந்து மதம் அனுமதித்ததில்லை.



    அந்த அடிப்படையில் பார்த்தால் எந்த ஒரு இந்துவும் பயங்கரவாதியாக இருக்க முடியாது. பயங்கரவாதியாக ஒருவர் இருந்தால் அவர் இந்துவாக இருக்க முடியாது.

    இவ்வாறு பிரதமர் மோடி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    தூத்துக்குடியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எந்த மதமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது இல்லை. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இந்துக்களை பயங்கரவாதிகள் என பேசியுள்ளார். அவர் அரசியலில் தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரை பின்னால் இருந்து யாரோ இயக்கி கொண்டு இருக்கிறார்கள். அது அரசியல் கட்சிகளா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. எனவே அவரது பிரசாரத்தை தடை செய்ய வேண்டும்.

    மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் நான் என்றும், ஒரு கட்டத்தில் இந்த நாட்டை விட்டே வெளியேறும் சூழ்நிலை ஏற்படும் என்றும் கூறியவர் கமல்ஹாசன்.

    இப்போது தரம் தாழ்ந்து பேசி வருகிறார். அவரது சர்ச்சை பேச்சுக்கு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவிப்பது வருத்தம் அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து நிருபர்கள் கமலின் சர்ச்சை பேச்சு குறித்து பிரதமர் மோடி குறிப்பிடும் போது, பயங்கரவாத செயல்களில் இந்துக்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும், பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் பேட்டி அளித்தது குறித்து கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த தமிழிசை சவுந்திரராஜன் பிரதமர் மோடி கூறியது சரிதான் என்றார்.




    கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 கோடி அளித்துள்ள கேரள முதல்- மந்திரி பினராய் விஜயனுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். #GajaCyclone #KamalHasan #PinarayiVijayan
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடிதம் எழுதினார்.

    இந்த நிலையில் கஜா புயல் பாதிப்புக்கு கேரள அரசு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குகிறது.

    இது தொடர்பாக முதல்- மந்திரி பினராய் விஜயன் தலைமையில் நடந்த கேரள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

    மேலும் இது தொடர்பாக பினராய் விஜயன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் தமிழ்நாட்டுக்கு கேரளா துணையாக இருக்கும். கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு உதவுவதற்காக கேரள அரசு சார்பில் ஏற்கனவே 14 வாகனங்களில் அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைத்து உள்ளோம்.

    மேலும் 6 மருத்துவ குழுவினர் மற்றும் கேரள மின்வாரியத்தைச் சேர்ந்த 72 ஊழியர்களும் தமிழக நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தன்னார்வம் கொண்டவர்களும் கஜா புயல் நிவாரண பணிகளுக்காக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு சென்று உள்ளனர். புயல் பாதிப்பில் இருந்து தமிழகம் விரைவில் மீள நாம் அனைத்து உதவிகளையும் செய்வோம்.



    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.10 கோடி அளித்துள்ள கேரள முதல்- மந்திரிக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

    கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூ.10 கோடி அளித்ததற்காக அந்த மாநில முதல்-மந்திரிக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்துக்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KamalHasan #PinarayiVijayan
    ×