search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalithaa death investigation"

    அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவை என்னுடன் சேர்ந்து சிவி சண்முகம பார்த்தார் என புகழேந்தி பேட்டி அளித்துள்ளார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று மாலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கர்நாடக மாநில செயலாளரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தி வந்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளாரே அது குறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்:- ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது நான் சென்று பார்த்தேன். அப்போது அமைச்சர் சி.வி.சண்முகமும் வந்து பார்த்தார். அப்போது எந்த கருத்தையும் அவர் கூறவில்லை.

    ஆனால், தற்போது அமைச்சர் சி.வி.சண்முகம் பல்வேறு கருத்துக்களை கூறுகிறார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று தெரிவிக்கிறார். மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கேவலமாக பேசுகிறார். இவர் சசிகலாவின் காலில் விழுந்து அமைச்சரானவர்.



    கே:- என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கம் பற்றி உங்களது கருத்து என்ன?

    ப:- நெய்வேலியில் 3-வது சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமையில் சேத்தியாத்தோப்பில் போராட்டம் நடைபெற்றது.

    தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் சில பேருக்கு என்.எல்.சி. என்றால் அதற்கான அர்த்தம் தெரியாது. என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.

    ஆனால், கடலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் பேசும்போது, என்.எல்.சி. 3-வது சுரங்க விரிவாக்கத்தை அனுமதிக்க மாட்டோம் என்று கூறுகிறார். இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்று தெரிய வருகிறது.

    கே:- திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- திருவாரூர் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் காமராஜ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

    எங்கள் மீதுள்ள பயத்தால் அனைவரும் இந்த இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் மனுக்கள் கொடுத்தனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து தேர்தலை ரத்து செய்து விட்டனர்.

    பொங்கல் இனாம் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.தற்போது அவர்களாகவே வழக்கு தொடர்ந்து வறுமை கோர்ட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் இனாம் வழக்கப்படும் என தெரிவிப்பது ஒரு ஏமாற்று வேலையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Pugalenthi #CVShanmugam #JayalalithaaDeath
    ஜெயலலிதா மரணம் குறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆதரவு தெரிவித்தார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam
    சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்துகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-

    அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து நல்ல விஷயம் தான். அதனை நான் வரவேற்கிறேன். அந்த கருத்தில் விசாரணைக்கு உட்பட்டு நடத்தவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது தனி. மாநில அமைப்பு இதனை நடத்தலாம்.

    சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்து விசாரிக்கட்டும். அதில் தவறு இல்லை.

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை திசை திருப்பவேண்டும் என்பதற்காக சி.வி.சண்முகம் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலா குடும்பம் 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் 5 நட்சத்திர ஓட்டல் போன்று பல அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, சாப்பிட்டதால் தான் ரூ.1¼ கோடி கட்டணம் வந்தது.

    ஜெயலலிதா சாப்பிட்டது கிடையாது. இதுதான் சட்டத்துறை அமைச்சரின் கருத்து. அமைச்சர்களுக்குள் யார் பிளவு ஏற்படுத்த முயன்றாலும் நடக்காது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.



    விசாரணை ஆணையம் அழைத்து கேட்டாலும், ஆஞ்சியோ செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார் என்ற கருத்தை சி.வி.சண்முகம் தெரிவிப்பார். சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை ஆணைய தலைவர் கருத்தில்கொண்டு விசாரிக்கட்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் போட்ட அறைகளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என நாங்கள் யாருமே தங்கவில்லை. சி.வி.சண்முகம் கூறியது போல அங்கு தங்கியது சசிகலா மற்றும் அவருடைய குடும்பம் தான்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் அமைக்கபட்டதால் சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இல்லையே. அதன்படி பார்த்தால் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும். ஒரு நாள் அதிகாரம் கொடுத்தால் மீனவர் பிரச்சினைகளை தீர்த்துவிடுவேன் என்று சீமான் கூறியிருப்பது 2018-ம் ஆண்டின் தலைசிறந்த ‘ஜோக்’.

    இவ்வாறு அவர் கூறினார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam
    ×