search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jamabandhi program"

    • ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
    • மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் வட்ட ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. முதல் நாள் கீழப்பாவூர் குறுவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமை தாங்கி பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்று கொண்டார். இன்று நெட்டூர், நாளை (26-ந்தேதி) புதுப்பட்டி, 30-ந்தேதி வெங்கடாம்பட்டி, 31-ந்தேதி ஆலங்குளம் குறுவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை அளித்து தீர்வு காணலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் தாசில்தார் கிருஷ்ணவேல், கீழப்பாவூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.க்கள், நில அளவைப்பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆதார், ரேஷன் கார்டு விண்ணப்பம், இட பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் ஜமாபந்தி மூலம் வழங்கப்படுகிறது.
    • ஜமாபந்தியில் உடனடி தீர்வு ஏற்படுத்தியதாக போலி கணக்கு காட்டப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சிஇன்று தொடங்குகிறது. முதியோர் உதவித் தொகை, கல்வி, திருமண உதவி, பட்டா மாறுதல், ஆதார், ரேஷன் கார்டு விண்ணப்பம், நில அளவை, இட பிரச்னை உள்ளிட்ட பல்வேறு மனுக்கள் ஜமாபந்தி மூலம் வழங்கப்படுகிறது.

    பல்லடம் தாலுகா நுகர்வோர் விழிப்புணர்வு இயக்க தலைவர் மணிக்குமார் கூறுகையில், தீர்வு காணப்படாத காலதாமதப்படுத்தப்படும் நில அளவை, இட ஆக்கிரமிப்பு, அபகரிப்பு, விவசாய பிரச்னை, பட்டா மாறுதல், வாரிசு, ஜாதி சான்றிதழ் கோருதல் உள்ளிட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணவே ஜமாபந்தி நடத்தப்படுகிறது. ஆனால் ஏற்கனவே தேங்கி கிடக்கும் மனுக்களை கணக்கில் காட்டி, ஜமாபந்தியில் உடனடி தீர்வு ஏற்படுத்தியதாக போலி கணக்கு காட்டப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஜமாபந்தியில் மனு அளிக்கும் பலருக்கு தீர்வு கிடைக்காமல் உள்ளது. மேலும், தீர்க்கப்படாத கோரிக்கையை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே கிராம நிர்வாக அலுவலக வரவு செலவு கணக்குகள் நேர் செய்யப்பட்டு ஜமாபந்தி அதிகாரியால் ஒப்புதல் வழங்கப்படும்.இதன் காரணமாக பல்வேறு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதும் வழக்கமாக உள்ளது. எனவே கண்துடைப்புக்காக நடத்தாமல் ஜமாபந்தி நிகழ்ச்சியை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடத்த வேண்டும் என்றார்.

    • பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருக்கிறது.பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருக்கிறது.
    • பள்ளி வளாகத்தில் உள்ள ஒதுக்குப் புறமான பகுதியில் கழிப்பிடம் கட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    அரவேனு:

    கோத்தகிரி அரவேனு தும்பூர் ஆரம்ப அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கடந்த 28-ந் தேதி நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு வந்து மனு கொடுத்தனர்.

    பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் கழிவறை உள்ளதால் அங்கு செல்ல பெரும் சிரமமாக இருப்பதாகவும், அந்த கழிவறையில் அட்டைப்பூச்சி, வனவி லங்குகள் புகுந்து விடுவதால் மிகவும் பாதிக்கப்ப ட்டு உள்ளதாகவும், எனவே பள்ளி வளாகத்தில் கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் மனுவில் கூறியிரு ந்தனர். இதைத் தொடர்ந்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்குச் சென்று ஆய்வு செய்தார். அப்போது கிராம மக்களில் சிலர் கோவிலுக்கு அருகில் பள்ளி அமைந்துள்ளதால், அங்கு கழிப்பிடம் கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதற்கு சப்-கலெக்டர் கோவிலுக்கு அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு கழிப்பிடங்களும் கட்ட ப்பட்டுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் குழந்தைகள் நலன் கருதி கழிப்பிடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தினார். பள்ளி வளாகத்தில் உள்ள ஒதுக்குப் புறமான பகுதியில் கழிப்பிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கான திட்ட மதிப்பீட்டை விரைவில் தனக்கு அனுப்பி வைக்குமாறும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபால், வருவாய் ஆய்வாளர் தீபக், ஜக்கனாரை ஊராட்சி செயலர் மூர்த்தி உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    ×