என் மலர்
நீங்கள் தேடியது "injured people"
- காா் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- காருக்குள் இருந்த 5 இளைஞா்களும் படுகாயமடைந்தனா்.
காங்கயம் :
சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியைச் சோ்ந்தவா்கள் கௌதம் (வயது 27), பிரகாஷ் (32), மணிகண்டன் (29), குமாா் (32), மோகனசுந்தரம் (17). இவா்கள் கொடைக்கானல் சென்று விட்டு எடப்பாடி நோக்கி தாராபுரம்-காங்கயம் வழியாக காரில் புதன்கிழமை மதியம் வந்து கொண்டிருந்தனா். மாலை 4 மணி அளவில் தாராபுரம்-காங்கயம் சாலை ஊதியூரை அடுத்த நொச்சிபாளையம் அருகே உள்ள சாலை வளைவுப் பகுதியில் வந்தபோது காா் எதிா்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காருக்குள் இருந்த 5 இளைஞா்களும் படுகாயமடைந்தனா்.
அப்போது அந்த வழியாக தாராபுரத்துக்கு சென்று கொண்டிருந்த தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆகியோா் அப்பகுதியில் காா் விபத்தில் சிக்கிக் கொண்டதை அறிந்து உடனடியாக காரை விட்டு இறங்கிச் சென்று, காயங்களுடன் இருந்த 5 பேரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பிரகாஷ், கௌதம் ஆகியோா் ஈரோடு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.விபத்து குறித்து ஊதியூா் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருப்பூர்:
திருப்பூர்- பல்லடம் சாலையில் தனியார் பனியன் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் பல்லடம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
அவர்களை பனியன் கம்பெனிக்கு சொந்தமான பஸ்சில் தினமும் வேலைக்கு அழைத்து வருவது வழக்கம்.
இன்று காலை பல்லடம் பகுதியில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவன பஸ்சில் வேலைக்கு வந்தனர்.
இந்த பஸ் திருப்பூர் -பல்லடம் சாலையில் குங்குமம் பாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோடு ஓரம் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர். அவர்களது தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்கள் வலியால் அலறி துடித்தனர்.
இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு திருப்பூர், பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்து காரணமாக திருப்பூர் -பல்லடம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.