search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "House theft"

    • பாளை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
    • சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார்.

    நெல்லை:

    பாளை ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 54). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றி ருந்தார்.

    இந்நிலையில் அவர்கள் இன்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ண மூர்த்தி உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் வீட்டில் இருந்த டி.வி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள் ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து கிருஷ்ணமூர்த்தி பாளை பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் இது தொடர் பாக வழக்குப்பதிவு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    • கூலி தொழிலாளிகளான கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டு பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர்.
    • பாளை கீழநத்தம் பகுதியில் சுடலை மாட சுவாமி கோவில் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 7-ந் தேதி பூசாரி கோவிலுக்கு சென்ற போது, அங்கிருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள உடையார்குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கி. இவரது மனைவி மகராசி (வயது 31).

    திருட்டு

    கூலி தொழிலாளிகளான கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் வீட்டை பூட்டு பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன், மனைவி இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தது. மேலும் அதில் வைத்திருந்த ரூ.25 ஆயிரம் பணமும் திருட்டு போனது தெரிய வந்தது. இதுகுறித்து பாளை தாலுகா போலீஸ் நிலையத்தில் மகராசி புகார் செய்தார்.

    மற்றொரு சம்பவம்

    பாளை கீழநத்தம் பகுதியில் சுடலை மாட சுவாமி கோவில் ஒன்று உள்ளது. அங்கு கடந்த 7-ந் தேதி பூசாரி கோவிலுக்கு சென்ற போது, அங்கிருந்த உண்டியலை மர்ம நபர்கள் உடைக்க முயற்சி செய்திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து நிர்வாகி கோபால் (50) என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவம் குறித்து பாளை தாலுகா போலீசில் புகார் செய்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கணவன், மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.
    • வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் ( வயது 50) . இவரது மனைவி செல்வராணி . இருவரும் கூலித் தொழிலாளிகள். நேற்று காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.

    பிறகு வேலை முடிந்து மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.இதை அறிந்த செல்வராணி பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம் பணமும், வீட்டின் டேபிள் மேல் வைத்திருந்த செல்போனும் காணாமல் போனது தெரியவந்தது, இது குறித்து வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார். இதேபோல் பச்சாபாளையத்தை சேர்ந்த கருணாகரன் மகன் மகேஸ்வரன் (30). இவர் வெள்ளகோவிலில் டெய்லராக வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் நேற்று சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது தெரியவந்தது.

    இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார், புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தொடர்ந்து இரண்டு வீட்டில் திருட்டு நடந்துள்ளதால் அப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    ×