search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "homage"

    • நெல்லையப்பர் கோவிலில் 75-வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
    • கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார்

    நெல்லை:

    சுதந்திர தினத்தையொட்டி தமிழகத்தில் இருக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஒரு சில கோவில்களில் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம்.

    அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான டவுன் நெல்லையப்பர் கோவிலில் 75-வது சுதந்திர தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    கோவில் முன்பு அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார். அப்போது கோவில் யானை காந்திமதி மரியாதை செய்தது.

    தொடர்ந்து கோவில் அர்ச்சகர்கள் தேசியக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை செய்தனர். அங்கிருந்தவர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டு, இனிப்புகளும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் ஊழியர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. #BudgetSession #Budget2019
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அதன்பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது. மறுநாள் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. திங்கட்கிழமையில் இருந்து ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியது. அப்போது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிஜு ஜனதா தளம் எம்பி லாடு கிஷோர் ஸ்வெயின் (வயது 71) மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.



    ஒடிசா மாநிலம் அஸ்கா தொகுதி எம்பியான லாடு கிஷோர் ஸ்வெயின், ஒடிசா சட்டசபை உறுப்பினராக 2004 முதல் 2009 வரை பணியாற்றினார். ஊரக வளர்ச்சி மற்றும் ஓபிசி விவகாரங்களுக்கான பாராளுமன்ற குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

    மக்களவையில் இன்று விவாதம் நடைபெறாததால், நாளை நடைபெற உள்ள கூட்டு கூட்டத்தில், ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது தொடர்ந்து விவாதம் நடைபெறும் என தெரிகிறது. விவாதத்திற்கு பிறகு பிரதமர் மோடி பதிலளித்து உரையாற்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  #BudgetSession #Budget2019
    6 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள செஷெல்ஸ் அதிபர் டேனி பவுரி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
    காந்திநகர்:

    இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு செஷல்ஸ் ஆகும். செஷல்ஸ் நாட்டில் உள்ள ஒரு தீவில் கடற்படை தளம் அமைப்பதற்காக இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 6 நாள் அரசு முறை பயணமாக செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி இன்று இந்தியா வந்தடைந்துள்ளார்.

    இதையடுத்து, இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு செஷல்ஸ் அதிபர் டேனி பவுரி சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். முன்னதாக சபர்மதி ஆசிரமத்தின் வருகை பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார்.



    அந்த பதிவில் ‘வன்முறைக்கு எதிரான அகிம்சை எனும் கொள்கையை நாம் நமது குழந்தைகளுக்கும் இந்த உலகத்துக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்’  என குறிப்பிட்டுள்ளார்.

    வரும் திங்களன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, செஷல்ஸ் அதிபர் டேபி பவுரி சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. #Seychelles #SabarmatiAshram #DannyAntoineRollenFaure
    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்களும், பொதுமக்களும் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.#rajivgandhi #deathanniversary #leaderspayhomage
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜீவ் காந்தி இந்தியாவில் மிகச் சிறிய வயதில் பிரதமர் ஆன முதல் தலைவர் ஆவார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் நிறைவடைகின்றன.

    இந்நிலையில், ராஜீவ் காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில்
    காங்கிரசின் மூத்த தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சகோதரி பிரியங்கா காந்தி மற்றும் அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள நினைவிடத்தில் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, காங்கிரசின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.



    மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான, மல்லிகார்ஜூன் கார்கே, சுஷில் குமார் ஷிண்டே ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

    காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும், தொண்டர்களும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். #rajivgandhi #deathanniversary #leaderspayhomage
    ×