search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "heist"

    • யுவராஜ் வீட்டிலிருந்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது.
    • சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பு தூரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சின்னியம்பாளையத்துக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், உள்பட 3 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்க பணம், எல்.இ.டி. டி.வி, லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பி யுவராஜ் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அன்னூர் அருகே உள்ள மாசாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 27). தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்றார்.

    அப்போது இவர்களது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் அறையில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.2.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிய சதீஸ்குமார் வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் இருந்த ரூ.2.50 லட்சம் பணத கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. கொள்ளை யர்கள் அதே பெட்டியில் இருந்த 8 அரை பவுன் தங்க நகைகளை எடுக்காமல் சென்றதால் நகைகள் தப்பியது.இது குறித்து சதீஸ்குமார் அன்னூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போ லீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • பேராசிரியர் வீட்டில் 56 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
    • மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாட்டுத்தாவணி லேக் ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் பிராங்கிளின் ரூபன் ஜெபராஜ் (வயது 52). இவர் மதுரை கோரிப்பா ளையத்தில் செயல்படும் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி விக்டோரியா ராணி. இவரும் பேராசி ரியராக உள்ளார்.

    இந்த நிலையில் பிராங்கி ளின் ரூபன் ஜெபராஜ் மற்றும் விக்டோரியா ராணி ஆகிய 2 பேரும் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு கல்லூரிக்கு சென்று விட்ட னர். இதனை நேட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 56 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.

    இந்த நிலையில் பிராங்கி ளின் ரூபன் ஜெபராஜ் மற்றும் விக்டோரியா ராணி ஆகிய 2 பேரும் நேற்று மாலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. உடனே பிராங்கிளின் லாக்கரை திறந்து பார்த்தார். அப்போது அதில் வைக்கப்பட்டிருந்த 56 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மாட்டுத்தாவணி போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டார். இதுதொடர்பாக போலீசார் மேல்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் சூரக்குமார் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதற்கிடையே மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது தெருமுனை வரை ஓடியது. மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் ரேகைகளை தடயவியல் சேகரித்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் நகை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்ற னர்.

    இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடி யாக கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாட்டுத்தாவணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜு, வெள்ளத்துரை தலைமை யில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    அவர்கள் சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, அவற்றில் இடம் பெற்றுள்ள காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் 2 பேர் பேராசிரியர் வீட்டின் முன்கதவு பூட்டை உடைத்து வீட்டுக்குள் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணைைய முடுக்கி விட்டுள்ளனர்.

    ×