என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் 2 வீடுகளில் நகை-பணம் கொள்ளை
- யுவராஜ் வீட்டிலிருந்து 3 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போனது.
- சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பு தூரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 32). ஐ.டி. ஊழியர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சின்னியம்பாளையத்துக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், உள்பட 3 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ரொக்க பணம், எல்.இ.டி. டி.வி, லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பி யுவராஜ் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் சூலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னூர் அருகே உள்ள மாசாண்டிபாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 27). தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்றார்.
அப்போது இவர்களது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். அவர்கள் அறையில் இருந்த பெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.2.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பிய சதீஸ்குமார் வீட்டின் கதவு திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது பெட்டியில் இருந்த ரூ.2.50 லட்சம் பணத கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. கொள்ளை யர்கள் அதே பெட்டியில் இருந்த 8 அரை பவுன் தங்க நகைகளை எடுக்காமல் சென்றதால் நகைகள் தப்பியது.இது குறித்து சதீஸ்குமார் அன்னூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போ லீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.






