search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hackathon"

    • தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
    • சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காவும், புதிய கண்டுபிடிப்புகளை கண்டறியவும் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் மூலம் அனைத்து தேசிய போட்டி மற்றும் அரசின் ஸ்டார்ட்அப் போட்டிகளிலும் பங்கேற்று சாதனை படைத்து வருகின்றனர்.

    இதனிடையே சென்னையில் சிவ நாடார் பல்கலைக்கழகத்தின் எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் ஹேக் இன்பனைட்டி போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பொறியியல் கல்லூரி மாணவர்கள் 25 குழுவினர் கலந்து கொண்டனர்.

    எப்.எக்ஸ் பொறியியல் கல்லூரி சார்பில் எம்பெ டெட் அண்ட் ஐ.ஓ.டி அப்ளைட் ஆய்வக மாண வர்கள் கிளாட்சன் ஜோயல் ராஜா, சாம் சார்லஸ், தங்கவேல், டோனல் ஆகிய குழுவினர் மீன் பண்ணையில் மீன் வளத்திற்கான அடிப்படை ஸ்மார்ட் மிதவை ஒன்றை கண்டுபிடித்தனர்.

    இந்த கண்டுபிடிப்புக்கு சிறப்பு பரிசு, சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு 8 ஆயிரம் வழங்கப்பட்டது. அந்த தானியங்கி மிதவை மூலம் மீன்களுக்கு உணவு, மாசு படிந்த தண்ணீரை கண்டறிதல் உள்ளிட்டவைகளை அது கண்டுபிடிக்க உதவும்.

    இந்தப் போட்டி மூலம் சக ஹேக்கர்களைச் சந்திக்கவும், புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளவும், அனுபவமிக்க வழிகாட்டி களுடன் சேர்ந்து திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் மாணவர்களுக்கு பேருதவியாக இருந்தது.

    இப்போட்டியில் பங்கேற்க ஊக்கம் அளித்த பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன் ஆகியோரையும் லஷ்மிநாராயணன், உதவி பேராசிரியர் பெரிஸ்கா மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குநர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.

    • அகில இந்திய அளவிலான ஹேக்கத்தான் இறுதிப்போட்டி நடந்தது.
    • இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    சிவகாசி

    மத்திய அரசால் 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ''ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்'' போட்டியானது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் உள்ள புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான முயற்சியாக நடத்தப்ப–டுகிறது.

    மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. இணைந்து இந்த போட்டியை வருடம் தோறும் ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் என இரு பிரிவுகளாக நடத்துகிறது. சாப்ட்வேர் பிரிவுக்கான இறுதிசுற்று சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் வருகிற 25-ந் தேதி மற்றும் 26 -ந் தேதிகளில் நடக்கிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்ள பஞ்சாப், புதுடெல்லி, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கோவா, தெலுங்கானா, கர்நாடகா, பீகார் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்குகிறார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகிக்கிறார்.

    சிறப்பு விருந்தினராக சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் கருணாமூர்த்தி, ஏ.ஐ.சி.டி.இ.யை சேர்ந்த உத்யன் மவுரியா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி, பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இந்த போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுடன் பிரதமர் மோடி, வருகிற 25-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை ஆன்லைனில் கலந்துரையாடுகிறார். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.

    இந்தியா - சிங்கப்பூர் முதல் ஹாக்கத்தான் போட்டியில் 6 குழுக்களை சேர்ந்த வெற்றியாளர்களுக்கு இன்று பரிசளித்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தார். #PMModi #Hackathon
    சிங்கப்பூர்:

    இந்தியாவில் எதிர்காலத்தில் ஏற்படும் மக்கள் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதை நோக்கமாக கொண்டு உலக அளவிலான பங்கேற்புடன் ஹாக்கத்தான் போட்டியை நிதி ஆயோக் தொடங்கியுள்ளது.  

    உலகிலேயே மிகப்பெரிய ஹாக்கத்தான்களின் ஒன்றாக கருதப்படும் மூவ் ஹாக் 10 குறிக்கோள்களை முன்வைத்துள்ளது.  இது மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.  ஒன்று இணையத்தில் பதிவு செய்வது, இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் முதலாவது போட்டி, புதுடெல்லியில் இறுதிப் போட்டி என்பது இந்தப்படி நிலைகளாகும்.

    ஹாக்கத்தான் விருது பெற அங்கீகரிக்கப்படும் 10 வெற்றியாளர்கள் உள்ளிட்டோருக்கு மொத்த பரிசுத் தொகையாக ரூ.2 கோடிக்கு மேல் வழங்கப்படும்.

    முதல்முறையாக இந்த ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்ற குழுக்களில் இந்தியாவை சேர்ந்த 3 குழுக்களும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுக்களும் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டன. சமீபத்தில் சிங்கப்பூரில் தொடந்து 36 மணிநேரம் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இவர்கள் பங்கேற்றனர்.

    இந்தியாவை சேர்ந்த 3 குழுவினரும், சிங்கப்பூரை சேர்ந்த 3 குழுவினரும் வெற்றியாளர்களாக இறுதி பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் முதலிடம் பெற்ற குழுவினருக்கு 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும், இரண்டாவது இடத்தை பிடித்த  குழுவினருக்கு 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும்,  மூன்றாவது இடத்தை பிடித்த குழுவினருக்கு 4 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்தது.
        
    இந்நிலையில், ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இந்த ஹாக்கத்தான் போட்டியில் பங்கேற்ற வெற்றியாளர்களை இன்று சந்தித்து பரிசுகளை வழங்கியதுடன் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.



    இந்தியா - சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தேசிய சாரண இயக்கத்தை சேர்ந்த மாணவர்கள் மாற்று நாடுகளை கண்டுவரும் திட்டத்தின்கீழ் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்துள்ள சாரண இயக்கத்தினரையும் மோடி சந்தித்து உரையாடினார்.

    மேலும், இன்று காலை சிற்றுண்டி விருந்தின்போது ஆசியான் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தலைவர்களையும் மோடி சந்தித்தார். அவர்களுடன் குழுவாக புகைப்படமும் எடுத்து கொண்டார்.  #PMModi #Hackathon 
    ×