என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Gujarat high court"
- 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.
- பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
புதுடெல்லி:
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த 3-ந்தேதி கூடி, 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.
அதன்படி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி விவேக்குமார் சிங், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி குமாரி கீதாகோபி ஆகிய இருவரையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றவும், அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கை, பாட்னா ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி அல்பேஷ் ஒய். கோக்ஜேவையும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அரவிந்த் சிங் சங்வானை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி சமீர் ஜே.தவே, பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அருண் மோங்காவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
இதுபோல, 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்ற மீண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாபுபா மானக். இவரது வெற்றியை எதிர்த்து, காங்கிரஸ் வேட்பாளர் மீராமன் ஆகிர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், பாஜக வேட்பாளர் மானக், குறைபாடுள்ள வேட்பு மனுவை தாக்கல் செய்ததாகவும், அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, துவாரகா எம்எல்ஏ பபுபா மானக்கின் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்காக, இந்த தீர்ப்பிற்கு 4 வாரங்கள் இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மானக்கின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. #GujratBJPMLA #CourtTerminatesMLA