search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பளித்தவர் பாட்னாவுக்கு மாற்றம்- 23 ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம்
    X

    ராகுல்காந்தி வழக்கில் தீர்ப்பளித்தவர் பாட்னாவுக்கு மாற்றம்- 23 ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கு பணியிட மாற்றம்

    • 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.
    • பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தலைமையிலான கொலீஜியம் கடந்த 3-ந்தேதி கூடி, 23 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு மாநில உயர்நீதிமன்றங்களுக்கு மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரையை வழங்கி உள்ளது.

    அதன்படி, அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி விவேக்குமார் சிங், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி குமாரி கீதாகோபி ஆகிய இருவரையும் சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றவும், அவதூறு வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி ஹேமந்த் பிரச்சக்கை, பாட்னா ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி அல்பேஷ் ஒய். கோக்ஜேவையும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அரவிந்த் சிங் சங்வானை அலகாபாத் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், குஜராத் ஐகோர்ட்டு நீதிபதி சமீர் ஜே.தவே, பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி அருண் மோங்காவை ராஜஸ்தான் ஐகோர்ட்டுக்கு மாற்றவும், பஞ்சாப்-ஹரியானா ஐகோர்ட்டு நீதிபதி ராஜ் மோகன் சிங்கை மத்திய பிரதேச ஐகோர்ட்டுக்கு மாற்றவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    இதுபோல, 14 ஐகோர்ட்டு நீதிபதிகளை வேறு உயர்நீதிமன்றங்களுக்கு மாற்ற மீண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

    Next Story
    ×