search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl student suicide"

    • கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை.
    • இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மகனும், முத்துலட்சுமி (16) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமி சிறுவயதாக இருக்கும் போதே அவரது தாய் இறந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமியின் தந்தையும் இறந்து விட்டார். இதையடுத்து முத்துலட்சுமியின் அத்தை சாந்தி முத்துலட்சுமியையும், அவரது அண்ணன் சூர்யாவையும் வளர்த்து வந்தார். முத்துலட்சுமி ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.

    கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். முத்துலட்சுமிக்கு அவரது அத்தை சாந்தி ஆறுதல் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று சாந்தியும், முத்துலட்சுமியின் அண்ணனும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை சாந்தி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சாந்தி கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது முத்துலட்சுமி வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூரில் பள்ளி சென்று திரும்பிய 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் நல்லூர் கோவில்வழியை சேர்ந்தவர் சிவகுமார். ஒர்க்‌ஷாப் தொழிலாளி. இவரது மனைவி ஈஸ்வரி. பனியன் தொழிலாளி. இவர்களது மகள் சுபத்ரா (வயது 14). அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சுபத்ராவும் பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு சென்ற சுபத்ரா மாலையில் வீடு திரும்பினார். அவரை தொடர்ந்து அவரது பெற்றோரும் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கு வந்து பார்த்த போது மகள் சுபத்ரா தூக்கில் பிணமாக தொங்கினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர். பெற்றோரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    பின்னர் இது குறித்து நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் கிடைக்காததால் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மதுரை:

    மதுரை வரிச்சியூர் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிகாமணி. இவரது மகள் சந்தியா (வயது 16) இவர், மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தர்மபுரி அருகே உள்ள எரியூரில் 10-ம் வகுப்பு படித்து முடித்த சந்தியா அந்த சான்றிதழை வாங்க முடியவில்லை. எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ் இருந்தால்தான் பிளஸ்-2 படிக்க முடியும் என்று ஆசிரியர்கள் மாணவியிடம் கூறியதாக தெரிகிறது.

    இதற்காக மாணவி சந்தியா சான்றிதழை பெற பல்வேறு முயற்சிகள் எடுத்தும் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கருப்பா யூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×