என் மலர்

  நீங்கள் தேடியது "Former PM Atal Bihari Vajpayee"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #AtalBihariVajpayee #Parliament #Portraittobeinstalled
  புதுடெல்லி:

  முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மூன்று முறை பிரதமராக பதவி வகித்தார். 1996ல் 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை என மூன்று முறை இந்திய பிரதமராக பதவி வகித்தார். இந்தியாவின் மிகவும் உயர்ந்த விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருது பெற்றுள்ளார். இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 16ம் தேதி காலமானார்.

  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் உருவப்படத்தை திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பல்வேறு கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

  இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பிப்ரவரி 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  வாஜ்பாய் படத்திறப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு மத்திய மந்திரிகள், தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #AtalBihariVajpayee #Parliament #Portraittobeinstalled
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிறந்த கவிஞர். கலகலப்பான நபர். மிகப்பெரும் கலா ரசிகர். பழைய படங்களை மிகவும் விரும்பி பார்ப்பார். #AtalBihariVajpayee
  பொதுவாக அரசியலில் இருப்பவர்கள், பெரும் பொறுப்புகளில் இருப்பவர்கள் எப்போதும் ஒரு இறுக்கமான மனதுடனேயே காட்சி அளிப்பார்கள்.

  அவர்கள் மற்ற வி‌ஷயங்களில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆனால், வாஜ்பாய் அப்படிப்பட்டவர் அல்ல. சிறந்த கவிஞர். கலகலப்பான நபர். மிகப்பெரும் கலா ரசிகர். அதுவும் சினிமா என்றால் அவருக்கு உயிர்.

  இதுபற்றி அவரது நெருங்கிய உறவினரான மாலா திவாரி சொல்வதை கேளுங்கள்...

  நான் வாஜ்பாயின் மூத்த சகோதரர் சதாபிகாரி வாஜ்பாயின் மகள். நாங்கள் ஆரம்பத்தில் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் வசித்து வந்தோம்.

  அப்போது நாங்கள் அடிக்கடி சினிமா பார்ப்போம். சித்தப்பா வாஜ்பாய்க்கும் சினிமா பார்ப்பதில் அலாதி பிரியம். எங்களுடன் அமர்ந்து அவரும் சினிமா பார்ப்பார்.

  நான் 1955-ல் பிறந்தேன். எனக்கு வேறு பெயர் சூட்டப்பட்டு இருந்தது. நான் பிறந்து ஒரு வருடம் கழித்து வைஜெயந்திமாலா நடித்த ‘நகின்’ என்ற படம் வெளியானது.

  நான் குழந்தையாக இருந்த போது, அடிக்கடி அழுவேனாம். ஆனால், நகின் படத்தின் பாடலை ஒலிபரப்பினால் உடனே அழுகையை நிறுத்தி விடுவேனாம்.

  இதனால் சித்தப்பா வாஜ்பாய் எனக்கு அந்த படத்தின் கதாநாயகியான வைஜெயந்திமாலா பெயரை சுருக்கி மாலா என்று பெயர் வைத்து விட்டார். அந்த பெயர்தான் இப்போது நீடித்து விட்டது.

  வாஜ்பாய் பழைய படங்களை மிகவும் விரும்பி பார்ப்பார். அதிலும் நகின், ரசியாசுல்தான் போன்ற படங்கள் மிகவும் பிடிக்கும்.  1999-ல் அமீர்கான் நடித்து வெளிவந்த ‘சர்பரோஸ்’ படத்தையும் மிகவும் விரும்பி பார்த்தார். அந்த படத்தை பார்த்து விட்டு என்னிடம் போனில் பேசி நீயும் அந்த படத்தை பார். நன்றாக இருக்கிறது என்று கூறினார்.

  நான் திருமணம் முடிந்து டெல்லியில் இருந்த போது, வாஜ்பாய், அத்வானி, அவருடைய மனைவி மற்றும் எனது கணவர் ஆகியோர் ஒன்றாக சென்றும் படம் பார்த்து இருக்கிறோம்.

  குவாலியரில் தயாரிக்கும் லட்டு என்றால் வாஜ்பாய்க்கு மிகவும் பிடிக்கும். எனவே, குவாலியரில் இருந்து எங்களது குடும்பத்தினர் யார் வந்தாலும் அவருக்காக லட்டு தயாரித்து கொண்டு வருவார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார். #AtalBihariVajpayee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது எந்த சமயத்திலும் யாருக்காகவும் நாட்டின் நலன் சார்ந்த விஷயத்தில் வளைந்து கொடுக்காமல் செயல்பட்டார். #AtalBihariVajpayee
  புதுடெல்லி:

  வாஜ்பாய் 1957-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக பாராளுமன்றத்தில் எம்.பி. யாக நுழைந்தார்.

  அப்போது ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தார். அவர், வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவர்களோடு எம்.பி.க்கள் குழுவும் சென்றது.

  அதில், இளம் எம்.பி.யான வாஜ்பாயும் இருந்தார். வாஜ்பாயின் வித்தியாசமான செயல்பாடுகளை கவனித்த நேரு, இவர் ஒரு நாள் பிரதமராக வருவார் என்று கூறினார்.

  ஆனால், அன்று நேரு சொன்னது போலவே பிற்காலத்தில் இந்த நாட்டின் பிரதமர் ஆகி இந்திய பிரதமர்களிலேயே மாபெரும் சாதனை செய்தவர் என்ற பெருமையையும் சேர்த்தார்.

  பொதுவாக வாஜ்பாயின் நடவடிக்கைகள் மிக மிருதுவான மனிதராகத்தான் வெளியுலகுக்கு காட்டும். இதை நினைத்து அவரை தவறாக எடை போட்டவர்களும் உண்டு.

  அவ்வாறு தவறான எடை போட்டவர்கள்தான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப், முன்னாள் அதிபர் மு‌ஷரப். அவர்கள் இருவருமே வாஜ்பாயை சாதாரணமாக நினைத்து கொண்டு இந்தியாவோடு வாலாட்டி பார்த்தார்கள்.

  பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் போன்றவற்றின் மூலம் அவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

  வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அமெரிக்கா கூட வாஜ்பாயை சாதாரணமாக எடை போட்டது.

  உலகில் பல நாட்டு தலைவர்களை தாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் போல் நடத்துவது அமெரிக்காவுக்கு வாடிக்கையான ஒன்று.

  அதுபோல்தான் வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் நாம் சொல்வதை எல்லாம் வாஜ்பாய் கேட்பார் என்ற எண்ணத்துடன் அமெரிக்கா செயல்பட்டது.

  ஈராக்குடன் போரில் ஈடுபட்ட அமெரிக்கா பல நாடுகளையும் தங்களோடு போரில் இணைத்து கொண்டது.

  அதே போல் இந்தியாவையும் போரில் ஈடுபட வைக்க முயற்சித்தது. ஆனால், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அமெரிக்காவின் சூழ்ச்சி வலையில் சிக்கவில்லை. போருக்கு படையை அனுப்ப மறுத்து விட்டார்.

  இதனால் அமெரிக்காவிடம் இருந்து பல எதிர் விளைவுகள் வந்தன. அதையும் வெற்றிகரமாக சமாளித்தார். பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதால் அமெரிக்கா அதை காரணம் காட்டி அமெரிக்கா நமக்கு தொல்லை கொடுத்தது. அதையும் சமாளித்தார்.

  இந்தியாவை எப்போதுமே எதிரி நாடாக பாவித்து வரும் சீனாவின் தொல்லை வாஜ்பாய் காலத்திலும் இருந்தது. அதையும் வெற்றிகரமாக எதிர்கொண்டார்.

  அவருடைய செயல்பாடுகள் நாட்டு நலன் வி‌ஷயத்தில் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர் என்பதை காட்டியது.

  அது மட்டும் அல்ல, பகை நாடுகளான பாகிஸ்தான், சீனாவுடன் எப்போதும் கடுகடுப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும் வாஜ்பாயிடம் இருந்ததில்லை.

  உறவுக்கு கை கொடுப்போம் என்பது போல் இவராகவே தானாக முன்வந்து இரு நாடுகளிடமும் சமரச பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார்.

  அதன்படி லாகூருக்கு பஸ் பயணம் மேற்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையே பஸ் போக்குவரத்தை தொடங்கினார்.  கார்கில் போருக்கு காரணமாக இருந்த மு‌ஷரப்பையே நமது நாட்டுக்கு அழைத்து வந்து சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

  வாஜ்பாய் கொடுத்த அழுத்தத்தினால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டிய நிலை மு‌ஷரப்புக்கு ஏற்பட்டது.

  சீனாவுக்கு பயணம் செய்த வாஜ்பாய், பழைய பகைகளை எல்லாம் மறந்து விட்டு வர்த்தக ரீதியான உறவுகளை மேம்படுத்த முன்வந்தார்.

  2003-ல் இந்தியா- சீனா இடையேயான வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியாக இருந்தது.

  தற்போது ரூ.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு வித்திட்டவர் வாஜ்பாய்.

  வெளிநாட்டு விவகாரங்களில் மிகத்துல்லியமான அறிவுத்திறன் கொண்டவர். மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது கூட வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பாக வாஜ்பாயுடன்தான் அடிக்கடி கருத்துக்களை கேட்டு வந்தார்.

  மிகச்சிறந்த அரசியல் ராஜ தந்திரமும் அவரிடம் உண்டு. இந்தியாவில் மிகச் சிறிய கட்சிகளில் ஒன்றாக ஜனசங்கம் இருந்து வந்தது. பின்னர் பா.ஜனதாவாக உருவெடுத்த இந்த கட்சி 2 எம்.பி.க்களை மட்டுமே கொண்டு இருந்தது.

  அந்த கட்சி நாட்டையே ஆளும் அளவுக்கு வந்தது என்றால் அதற்கு முழு காரணமாக வாஜ்பாய் இருந்தார்.

  முதலில் அவர் ஆட்சிக்கு வந்து 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். அடுத்து 13 கட்சி கூட்டணியுடன் தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்தார். 13 மாதம் மட்டுமே ஆட்சி நீடித்தது.

  ஆனாலும், வாஜ்பாய் மீது கொண்ட நம்பிக்கையால் மக்கள் வாக்குகளை அள்ளி குவித்தனர். இதன் காரணமாக மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர், தொடர்ந்து 5 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தார்.

  அதற்கு முன்பு வரை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் நாட்டில் நிலையான ஆட்சியை தர முடியாது என்ற எண்ணமே இருந்தது.

  ஆனால், அதை வாஜ்பாய் முறியடித்து காட்டினார். ஏராளமான கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைந்த போதும் எல்லோரையும் சமாளித்து மிக சாதுர்யமாக ஆட்சியை நடத்தினார்.

  பாராளுமன்ற வரலாற்றிலேயே மிகச் சிறந்த பேச்சாளர் என்ற பெருமை வாஜ்பாய்க்கு உண்டு. பாராளுமன்ற பேச்சானாலும் சரி, வெளி மேடை பேச்சானாலும் சரி, அவரது பேச்சு எல்லோரையும் கவருவதாக இருக்கும்.

  ஒரு கதை சொல்வது போல் தனது பேச்சை வடிவமைத்துக்கொள்வார். அத்தனை பேரையும் தனது பேச்சோடு ஒன்றிணைய செய்து விடுவார். ஏற்ற, இறக்கங்களுடன் தலையை அங்குமிங்கும் அசைத்து அவர் பேசுவதே வித்தியாசமாக இருக்கும்.

  வாழ்நாளில் யாரும் அவரை விரல் நீட்டி குறை சொல்ல முடியாத நபராக வாழ்ந்து மறைந்து இருக்கிறார், நமது தலைவர் வாஜ்பாய். #AtalBihariVajpayee

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், தீவிர உணவு பிரியர் ஆவார். அவருடன் பணியாற்றிய அதிகாரிகளும், நெருக்கமான பத்திரிகையாளர்களும் இதுபற்றிய சுவையான தகவல்களை நினைவுகூர்ந்துள்ளனர். #AtalBihariVajpayee
  புதுடெல்லி:

  மத்திய மந்திரிசபை கூட்டங்களில் கூட வாஜ்பாய் உப்புக்கடலையை கொறித்துக் கொண்டு இருப்பார். ஒவ்வொரு தடவையும் தட்டு நிறைய அதை நிரப்பி வைக்க வேண்டும். கூட்டம் முடிவடையும்போது, தட்டு காலியாகி இருக்கும்.

  வாஜ்பாய்க்கு இனிப்புகளும், கடல் உணவுகளும் குறிப்பாக இறால் மிகவும் பிடிக்கும். எந்த ஊருக்கு சென்றாலும், அந்த ஊரின் புகழ்பெற்ற உணவு வகைகளை கேட்டு வாங்கி சாப்பிடுவார்.

  வாஜ்பாயின் சீடரான லால்ஜி தாண்டன், லக்னோவில் இருந்து கபாப் உணவுவகைகளை வாங்கி வந்து தருவார்.

  மத்திய மந்திரி விஜய் கோயலுக்கு பழைய டெல்லியில் இருந்து சாட் உணவுவகைகளை வாங்கி வரும் பொறுப்பு.

  தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திராவில் இருந்து இறால் வாங்கி வருவார்.

  ஏராளமான மசாலாவுடன் பக்கோடா சாப்பிடுவதும், மசாலா டீ அருந்துவதும் வாஜ்பாய்க்கு பிடித்தமான வி‌ஷயம்.

  ஒருமுறை அரசாங்க விருந்தின்போது, உணவு பகுதியில், குலாப் ஜாமுன் உள்ளிட்ட இனிப்புவகைகள் அணிவகுத்து இருந்ததை பார்த்தவுடன், வாஜ்பாய் அந்த பகுதிக்கு நகர்ந்தார்.

  அதை பார்த்து கவலை அடைந்த அதிகாரிகள், ஒரு தந்திரம் செய்தனர். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை மாதுரி தீட்சித்தை வாஜ்பாய்க்கு அறிமுகம் செய்து வைத்தனர். பிறகு மாதுரி தீட்சித்துடன் திரையுலகம் குறித்து வாஜ்பாய் உரையாடத் தொடங்கினார். அந்த இடைவெளியில், இனிப்புவகைகளை அங்கிருந்து மறைத்து விட்டனர், அதிகாரிகள்.

  வாஜ்பாய்க்கும் நன்றாக சமைக்கத் தெரியும். தன்னை சந்திக்க வரும் பத்திரிகையாளர்களுக்கு அவரே ஏதேனும் ஒரு உணவுவகையை சமைத்து வழங்குவார். அது பெரும்பாலும் இனிப்புவகையாகவோ அல்லது அசைவமாகவோ இருக்கும்.  உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது கூட வாஜ்பாய் சமோசா சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக அதிகாரிகள் நினைவு கூர்ந்தனர்.  #AtalBihariVajpayee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அறிவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார். #AIIMS #AtalBihariVajpayee #PMModi
  புதுடெல்லி:

  1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

  அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

  இதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மோசமடைந்தது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எய்ம்சில் சிகிச்சை பெற்று வரும அவரை பிரதமர் மோடி உள்பட முக்கிய தலைவர்கள் நேரில் சென்று உடல்நிலை குறித்து விசாரித்தனர்.  இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலம் குறித்து அறிவதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றார்.

  இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், பிரதமர் மோடி நேற்று இரவு 9 மணிக்கு மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தார். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வாஜ்பாய் உறவினர்களை சந்தித்து பேசினார். அப்போது வாஜ்பாய் உடல் நிலை முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார் என தெரிவித்துள்ளனர். #AIIMS #AtalBihariVajpayee #PMModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால் இன்னும் சில தினங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். #AIIMS #AtalBihariVajpayee
  புதுடெல்லி:

  1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

  அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக்குச் சென்று விருதை வழங்கினார்.

  இதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை சமீபத்தில் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால் அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

  இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதால் இன்னும் சில தினங்களில் முழுமையாக குணமடைந்து விடுவார் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
   
  இதுதொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளார். அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் உள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக சிறுநீரக தொற்று சரியாகி வருகிறது. ஒரு சில நாட்களில் வாஜ்பாய் வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளார். #AIIMS #AtalBihariVajpayee
  ×