search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dmk activists meeting"

    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • பூத் கமிட்டி அமைக்கும் பணியை வரும் 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ பேசினார்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

    தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் முத்துசெல்வி, துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை ஆகியோர் வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.

    இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-

    நாளை தென்காசி மாவட்டத்திற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதல்-அமைச்சரை உற்சாகமாக வரவேற்க வேண்டும். மற்ற மாவட்டங்களை காட்டிலும் நம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சரை நாம் வரவேற்றதை பார்த்து மற்ற மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு பணி செய்தீர்கள் என்று கேட்கும் நிலையை உருவாக்க வேண்டும்.

    புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிந்தாமணி விலக்கில் அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கொடி கம்பத்தில் முதல்-அமைச்சர் கட்சி கொடி ஏற்ற உள்ளார்.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் சீருடை அணிந்து உற்சாகமாக முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும். தென்காசியில் நிகழ்ச்சி முடிந்து ராஜபாளையம் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி வடக்கு மாவட்ட பகுதியில் மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் வரும் வழியில் 14 மேடைகள் அமைக்கப்பட்டு அங்கு பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் அனைவரும் இணைந்து முதல்-அமைச்சருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு விழாவை தலைமை கழகம் அறிவித்தது போல சிறப்பாக நடத்த வேண்டும். மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை வரும் 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றி கொண்டாடுவது என்பன குறித்து விவாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் பாளையில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    ஆவுடையப்பன்

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தமயந்தி, நம்பி, மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    நலத்திட்ட உதவிகள்

    இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், புதிய வாக்காளர்களை சேர்த்தல், தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்தல், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றி கொண்டாடுவது என்பன குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.பிரபாகரன், பிரபாகர பாண்டியன், சித்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், பரணி சேகர், ஜோசப் பெல்சி, முத்துப்பாண்டி என்ற பிரபு, பி.சி.ராஜன், பேரூராட்சி சேர்மன் சேவியர் செல்வராஜா, மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை சேர்மன் இசக்கி பாண்டியன் மாவட்ட வக்கீல் அணி செல்வ சூடாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரியாபட்டி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தென்னரசு எம்எல்ஏ பங்கேற்றார்.

    காரியாபட்டி:

    காரியாபட்டி ஒன்றிய, நகர தி.மு.க. சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்லம் தலைமையில் நடந்தது. நகரச் செயலாளர் செந்தில் முன்னிலை வகித்தார்.

    முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் 21-ம் ஆண்டு நினைவு அஞ்சலி வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி மல்லாங்கிணற்றில் இருந்து தங்கப்பாண்டியன் சமாதிக்கு மவுன ஊர்வலம் நடைபெற உள்ளது.

    இதில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

    கூட்டத்தில் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ பேசியதாவது:-

    தற்போது ஒவ்வொரு கிராமம் வாரியாக பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூத் கமிட்டியை பார்வையிட்டு ஆய்வு செய்ய தலைமை நிர்வாகிகள் வர உள்ளனர்.

    அவர்களிடம் நூறு சதவீதம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க வேண்டும்.

    ஏனென்றால் நாடாளு மன்றத்திற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள சூழ்நிலையை பார்க்கும் போது தமிழகத்திலும் சட்டமன்ற தேர்தல் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பூத் கமிட்டியை முழுமையாக அமைக்க வேண்டும்.

    இவ்வார் அவர் பேசினார்.

    முன்னாள் யூனியன் துணைத் தலைவர் மணி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, ஒன்றிய அவைத் தலைவர் மகேந்திரசாமி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் தமிழ்வாணன், தோப்பூர் தங்கப்பாண்டியன், குரண்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, மாவட்ட துணைச் செயலளார் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×