என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசியபோது எடுத்த படம்.
சங்கரன்கோவிலில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்- வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பங்கேற்பு
- தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
- பூத் கமிட்டி அமைக்கும் பணியை வரும் 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ பேசினார்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, சீனிவாசன், பரமகுரு, தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் முத்துசெல்வி, துணைச் செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா ஆகியோர் முன்னிலை ஆகியோர் வகித்தனர். சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார்.
இதில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-
நாளை தென்காசி மாவட்டத்திற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதல்-அமைச்சரை உற்சாகமாக வரவேற்க வேண்டும். மற்ற மாவட்டங்களை காட்டிலும் நம் மாவட்டத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சரை நாம் வரவேற்றதை பார்த்து மற்ற மாவட்ட நிர்வாகிகள் எவ்வாறு பணி செய்தீர்கள் என்று கேட்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி ஆகிய பகுதிகளில் முதல்-அமைச்சரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சிந்தாமணி விலக்கில் அமைக்கப்பட்டுள்ள 60 அடி உயர கொடி கம்பத்தில் முதல்-அமைச்சர் கட்சி கொடி ஏற்ற உள்ளார்.
இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் சீருடை அணிந்து உற்சாகமாக முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும். தென்காசியில் நிகழ்ச்சி முடிந்து ராஜபாளையம் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தென்காசி வடக்கு மாவட்ட பகுதியில் மக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.
முதல்-அமைச்சர் வரும் வழியில் 14 மேடைகள் அமைக்கப்பட்டு அங்கு பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் அனைவரும் இணைந்து முதல்-அமைச்சருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும். பேராசிரியர் பெருந்தகையின் நூற்றாண்டு விழாவை தலைமை கழகம் அறிவித்தது போல சிறப்பாக நடத்த வேண்டும். மேலும் பூத் கமிட்டி அமைக்கும் பணியை வரும் 20-ந் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.






