என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avudaiappan"

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
    • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் பாளையில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் கலந்து கொண்டு பேசினார்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் 2-வது முறையாக தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கும் பாராட்டுகள் தெரிவிப்பது,

    இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வருகிற 27-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி ஏழை, எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்புகள் வழங்கி கட்சிக்கொடி ஏற்றுவது, இந்தி திணப்புக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து பாசறைக்கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துக்கூறுவது, வாக்குச்சாவடி முகவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

    ஒன்றிய, நகர, பேரூராட்சிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    சிறப்பு அழைப்பாளர்கள்

    மேலும் வருகிற 5-ந் தேதி அம்பையிலும், 6-ந் தேதி ராதாபுரத்திலும் நடைபெறும் இளைஞர் பாசறை கூட்டத்தில் டாக்டர் எழிலன் எம்.எல்.ஏ., இளைஞரணி நிர்வாகி சூரிய கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுவதாக தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் பிராபகரன், மாவட்ட துணைச்செயலாளர் தமயந்தி, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், அம்பை சேர்மன் பிரபாகர பாண்டியன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் ஆவின் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், சுடலைக்கண்ணு, பரணி சேகர், முத்துப்பாண்டி என்ற பிரபு, போர்வெல் கணேசன், ஜோசப் பெல்சி, ராஜா ஞானதிரவியம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான்ரவீந்தர், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை சேர்மன் இசக்கிபாண்டி, தி.மு.க. நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
    • மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றி கொண்டாடுவது என்பன குறித்து விவாதிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் பாளையில் உள்ள ஒரு மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

    ஆவுடையப்பன்

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் தமயந்தி, நம்பி, மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பொருளாளர் ஜார்ஜ் கோசல் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    நலத்திட்ட உதவிகள்

    இந்த கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள், புதிய வாக்காளர்களை சேர்த்தல், தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்தல், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்றி கொண்டாடுவது என்பன குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆ.பிரபாகரன், பிரபாகர பாண்டியன், சித்திக், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நிர்வாகி கணேஷ்குமார் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், ஒன்றிய செயலாளர்கள் கே.எஸ். தங்கபாண்டியன், பரணி சேகர், ஜோசப் பெல்சி, முத்துப்பாண்டி என்ற பிரபு, பி.சி.ராஜன், பேரூராட்சி சேர்மன் சேவியர் செல்வராஜா, மாவட்ட கவுன்சிலர் கனகராஜ், கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி துணை சேர்மன் இசக்கி பாண்டியன் மாவட்ட வக்கீல் அணி செல்வ சூடாமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×