search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Daily Market"

    • கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேற்று சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
    • அரசு சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி :

    கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் அனைத்து வியாபாரிகளுக்கும் கடைகள் வழங்குவது தொடர்பாகவும், நகராட்சி தினசரி சந்தை தொடர்பாகவும் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ நேற்று சட்ட மன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மா னம் கொண்டு வந்து பேசியதாவது:-

    கோவில்பட்டியில் நக ராட்சிக்கு சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி காய்கறிசந்தை 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையை கோவில்பட்டி நகர் மட்டுமின்றி விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட 5 தொகுதிகளை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    தற்பொழுது தினசரி சந்தையில் அரசு சார்பில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய கடைகள் கட்டுவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டு, 250 கடைகள் கட்டுவதாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. ஏற்கனவே அந்த காய்கறி சந்தையில் 396 கடைகள் செயல்பட்டு வருகின்ற இதனால் 146 வியாபாரிகள் வாழ்வாதரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதனால் பதற்றத்தினையும், அச்சத்தினையும் உருவாக்கி உள்ளது.

    கொரோனா காலத்தில் கடை கள் மூடப்பட்டு இருந்த போது வியாபாரிகள் தங்களது சொந்த செலவில் பழுது பார்த்து நல்ல நிலையில் வைத்துள்ளனர். எனவே அந்த இடத்தில் கடைகளை கட்டுவதற்கு பதிலாக புதியதாக கிருஷ்ணா நகரில் நகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த இடத்தில் தற்பொழுது குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. 5 ஏக்கர் இடம் பயன்பாட்டிற்கு உகந்த இடமாக உள்ளது. அந்த இடத்தில் மாற்று ஏற்பாடாக புதியதாக கடைகளை கட்டும் நேரத்தில் அரசுக்கு வருவாய் கிடைக்கும், அங்குள்ள வியாபாரிகளும், பொது மக்களும் பயன்படுத்து சூழ்நிலையை அமைச்சர் ஏற்படுத்தி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதற்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் கூறுகையில், ஏற்கனவே 396 கடைகள் இருந்த தாகவும், புதியதாக கட்டுப்படுவதில் 250 கடைகள் கட்டுப்படுவதாக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அதிகமான மக்கள் வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

    வசதிகள் செய்வதற்கும், வாகனங்கள் எளிதாக உள்ளே செல்ல வேண்டும் என்பதற்காக தான் கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பவர்கள் அனைவருக்கும் கடைகள் தரவேண்டும் என்றால் குப்பைகள் அகற்றி நகராட்சி இடம் இருப்பதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அந்த இடத்தினை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் அனுமதி பெற வேண்டும், இ.எஸ்.ஐ மருந்தகத்தில் இடம் இருப்பதாக தெரி வித்துள்ளீர்கள், சம்ப ந்தப்ட்ட துறை அமைச்ச கத்தில் பேசி, அவர்கள் சம்மதம் தெரி வித்தால் அனைவருக்கும் கடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.
    • நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் புதிய தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணியினை கலெக்டர் வினீத் தலைமையில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ,ஆதிதிராவிடர் நலத்துறைஅமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 62 நபர்களுக்கு 24.80 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டாக்களை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், தாராபுரம் ஆணையாளர் ராமர், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் குமரேசன், நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் நகராட்சி ஆணையர் (நான்) ஆகியோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது.
    • கூடுதல் பஸ் நிலையத்தில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) பார்த்தசாரதி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கோவில்பட்டி நக ராட்சி பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் தினசரி சந்தை புதுப்பிக்கப் பட உள்ளதையொட்டி, கூடுதல் பஸ் நிலையத்தில் நகராட்சி தினசரி சந்தை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, டி.எஸ்.பி. வெங்கடேஷ், நகராட்சி தலைவர் கருணாநிதி மற்றும் நகராட்சி ஆணையர் (நான்) ஆகியோர் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில், கூடுதல் பஸ் நிலையத்தில் பசும்பொன் முத்துராம லிங்கத் தேவர் தினசரி சந்தை வியாபாரிகளுக்கு கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.

    எனவே கூடுதல் பஸ் நிலையத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்யும் வகையில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை குத்தகை தாரர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் நகராட்சி அலுவலகத்தில் இன்று (7-ந் தேதி ) மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்ட பின் கூடுதல் பஸ் நிலையத்தில் குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே, குத்தகை தாரர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் அனைவரும் இதில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சங்கரன்கோவில் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.68 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டுவத ற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
    • தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தினசரி மார்க்கெட் கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து பேசினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.7.68 கோடி மதிப்பீட்டில் தினசரி மார்க்கெட் கட்டிடம் கட்டுவத ற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் ஹரிகரன், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, மாவட்ட துணை செயலாளர் புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தினசரி மார்க்கெட் கட்டிட பணிகளை அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்து பேசினார்.

    இதில் காஞ்சிபுரம் பட்டு நூல் கழக சேர்மன் மணிவண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் வெள்ளத்துரை, மகேஸ்வரி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யதுஅலி, இளைஞர் அணி சரவணன், மார்க்கெட் சங்க நிர்வாகி கணேசன், யோசேப்பு, நகர துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், கே.எஸ்.எஸ். மாரியப்பன், நகராட்சி கவுன்சிலர்கள் குருப்பிரியா, அலமேலு, புஷ்பம், செல்வராஜ், ராமுராமர், வேல்ராஜ், ராஜாஆறுமுகம், சாகுல் ஹமீது, வக்கீல்கள் சதீஷ், ராம்குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்ட செயலாளர் மகாராஜன், மூத்த நிர்வாகி சந்திரன், நகராட்சி கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து, மற்றும் ஜிந்தா மைதீன், சிறுபான்மையர் அணி அப்துல் காதர், அரசு ஒப்பந்ததாரர் நிஜார் மற்றும் வார்டு செயலாளர்கள் வீராசாமி, வீரமணி, வைரவேல், சரவணன், தங்கவேலு, தாஸ், விக்னேஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

    ×