என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cylinder exploded"

    • மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.
    • உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.

    தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த அயன்ராசாபட்டி தொடக்கப்பள்ளி சத்துணவு கூடத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மாணவர்களுக்கு காலை உணவு தயாரித்து கொண்டிருந்தபோது சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

    உணவை தயாரித்து கொண்டிருந்த பெண் சமையலர் துரிதமாக செயல்பட்டு வெளியேறியதால் அவர் உயிர் தப்பினார்.

    தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டதையடுத்து அவர்கள் தீயை அணைத்தனர். இதனால் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

    திண்டுக்கல் அருகே சிலிண்டர் வெடித்து சிதறியதில் பெண் உடல் கருகி பலியானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டை கமலா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ். சிக்கன் கடை வைத்துள்ளார். அவரது மனைவி அருள்மேரி (வயது 40). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று இரவு அற்புத ராஜ் தனது மனைவி ஒரு மகன், மகளுடன் வீட்டில் தூங்கினார். இன்னொரு மகன் வெளியூர் சென்று விட்டார்.

    இன்று காலை அருள்மேரி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் வீட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடிகள் சிதறின.

    கண் இமைக்கும் நேரத்தில் அருள்மேரி உடலில் தீ பற்றியது. இதனால் அவர் அபயக்குரலிட்டார். சத்தம் கேட்டு இன்னொரு அறையில் இருந்த அற்புதராஜ் மகன் மரிய ஆல்வின் ஆகியோர் விரைந்து வந்து அருள்மேரியை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களுக்குக்கும் தீக்காயம் ஏற்பட்டதால் கதறினர்.

    சத்தம் கேட்டு ஊரில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் அருள்மேரி சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார். தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    தீக்காயமடைந்த அற்புதராஜ், அவரது மகன் மரிய ஆல்வின் ஆகியோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×